இளநீரின் எண்ணற்ற நன்மைகள்
மனிதர்களுக்கு இயற்கை வழங்கியுள்ள கொடைகளில் ஒன்றான இளநீர், எண்ணற்ற நன்மைகளை அள்ளித் தருகிறது. இது வெப்பத்தைத் தனித்து, செரிமான சக்தியை அளிக்கும். இளநீர் குடித்தால் ரத்தம் சுத்தமடைவதொடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. பெண்களின் மாதவிலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி, சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர்தான். டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கபடும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகிப்பதால் அறுவைச் சிகிச்சைப்புன் விரைவில் குணமடையும். இவ்வளவு நன்மைகளை மனிதனுக்கு வழங்கும் இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதைத் தவிக்க வேண்டும். ஏனெனில், தூங்கி எழுந்தவுடன் வயிறு சற்று சூடாக இருப்பதால், இளநீ...