Posts

Showing posts from October, 2018

தொலைவில் இருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம் கொண்ட நாகலிங்க மலர்கள்.

Image
நாகலிங்க மலர் இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு வண்ணம் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்டது நாகலிங்க மலர்கள். தொலைவில் இருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம் கொண்டது இந்த மலர்கள். மகரந்த தூவிகள் படமெடுத்து ஆடும் பாம்பு போல் வித்தியாசமாக இருப்பதால், இதன் பெயரும் வித்தியாசம்தான். நாகலிங்க மரங்கள் நீலகிரி மழைப் பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. மிதமான தட்பவெப்ப நிலையில் வளரும் தன்மை கொண்டது இந்த மரங்கள், நீலகிரி மாவட்டம் பர்லியாறு பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.  கடல் கடந்து வந்த மரம் பல தாவரங்கள் கடல் கடந்து நம் மண்ணை வந்தடைந்துள்ளன. அவை நம்மிடையே பரவலானது மட்டுமில்லாமல், உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்று நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகவும் மாறி விடுவது உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த நாகலிங்க மரமும்.  இதன் தாவரவியல் பெயர் கொரூபியா கினென்சிஸ். தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல பகுதிகள் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளை தாயகமாகக் கொண்ட இந்த மரம் லேசிதிடசாய் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது.  இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது. இலங்கையின் சில பகுதிகளிலும் நாகலிங்க மரங்கள் காணப்பட

கைகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருங்கள்!

Image
கைகளை சுத்தமாக வைத்திருப்பதே நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவும். கைகளில் படிந்திருக்கும் கிரிமிகள், உடலுக்குள் சென்று பல்வேறு உபாதைகளுக்கு காரணமாகிவிடுகின்றன. அதனால் நன்றாக கைகளை கழுவ வேண்டும். எப்படி தெரியுமா? சாப்பிடுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 20 நொடிகளாவது சோப்பிட்டு கைவிரல்களை தேய்த்து கழுவ வேண்டும். விரல் இடுக்குகளை சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈ.கோவை போன்ற பாக்டீரியாக்கள் அதிலிருந்து நோய் பாதிப்புக்கு உள்ளாகி விடும். கைகளை கழுவிய பிறகே ஈரப்பதமான நிலையிலேயே உலர வைத்து விடக்கூடாது. தவளை கொண்டு துடைக்க வேண்டும். மூன்று முறைக்கு மேல் தவளை துவைக்காமல் பயன்படுத்தக்கூடாது. அடுத்தவர்களின் தவளையும் உபயோகப்படுத்தக் கூடாது. நோய்வாய்ப்டிருப்பவர்களை பார்த்து நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் வீடு திரும்பியதும் மறக்காமல் கைகளை கழுவி விட வேண்டும். காயங்களுக்கு மருந்திட்டுவதற்கு முன்பும், பின்பும், கைவிரல்களை சுத்தமாக தேய்த்து கழுவுங்கள். ஒரு சிலர் காயங்களுக்கு மருந்து போட்ட பிறகுதான் கைகளை கழுவுவார்கள். அது தவறான பழக்கம். கைகளில் படிந்திருக்கும் கிருமிகள் காயங்களில் பட

டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது? அதைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Image
டெங்கு கொசு பணமும், வசதிகளும் மட்டுமே மகிழ்ச்சியின் அளவுகோல் அல்ல. வியாதி இல்லாத உடம்பும், வேதனை இல்லாத மனதும் தான் நிறைவான வாழ்க்கை. நோயுறும்போது தான் வாழ்க்கையின் அருமை தெரியும். மக்கள் தொகை பெருக்கமும், உணவுமுறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், சுகாதார சீர்கேடு போன்றவற்றால் நாட்டு வியாதிகளுக்கு பஞ்சமில்லை. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது. சென்னை உள்ளிட்ட சில ஊர்களில் இந்த காய்ச்சலால் சிலர் உயிரிழந்திருக்கிறார்கள். டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது? அதை கட்டுப்படுத்துவது எப்படி? என்பன போன்ற விவரங்கள் பற்றி நாம் பார்ப்போம். உலக அளவில் சுமார் 200 கோடி மக்கள், மனித கழிவு கலந்த நீரை பருகுவதால் வாந்தி, பேதி, காலரா, டைபாய்டு, போலியோ போன்ற வியாதிகளால் பாதிக்கப்படுகிறார்கள். வயிற்றுபோக்கால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பேர் இறக்கிறார்கள். இந்தியாவில் 70 சதவீத மேற்பரப்பு நீரும், மிகுந்த அளவிலான நிலத்தடி நீரும், சாக்கடை, தொழிற்சாலை, நச்சுப் பொருட்கள், மேலும் மனித கழிவால் மாசு அடைகின்றன. இந்தியாவிலுள்ள எந்த ஒரு நீர்நிலை நீரும

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

Image
காடை  ( ஆங்கிலம் : Quail) காடை  ( ஆங்கிலம் : Quail) என்பது   ஃபசியானிடே  ( தொகையுடைப் பறவைகள் ) குடும்பத்தில் உள்ள நடுத்தர அளவு கொண்ட பல   பறவை இ னங்களைக்   குறிக்கும் பெயர்ச்சொல்லாகும்.   புது உலகக் காடைகள்  ( ஓடோண்டோஃபோரிடே   குடும்பம்) மற்றும்   பட்டன் காடைகள் ( டுர்னிசிடே   குடும்பம்) ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை அல்லன , எனினும் அவற்றின் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்களின் காரணமாகக் காடைகள் என ஒரே பெயரில் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இறைச்சிக்காக ஜப்பானியக் காடைகள் வளர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்தக் காடைகள் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில அசைவக் கடைகளில் மட்டும் உணவாகப் பயன்படுத்தப்பட்டாலும் , இந்தக் காடை இறைச்சியில் சில மருத்துவக் குணங்கள் இருப்பதாகக் கருதப்படுவதை அடுத்து வீடுகளில் இருப்பவர்களும் வாங்கத் தொடங்கியிருப்பதால் காடை வளர்ப்பில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். மதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது . ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான் . நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன் . சாப்ப

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?

Image
ஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும் . ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன் . வட்டில் கோழி அறுத்தால் ஒரு துண்டு ஈரல் கிடைக்கும் . சிலர் சுட்டு தின்பார்கள் . குழம்பில் போட்டால் தனியாக மிதக்கும் . கறி வெந்த பிறகு கொஞ்ச நேரம் கழித்து போட வேண்டும் . ஆட்டு ஈரல் கடைகளில் சாதாரணமாக கிடைக்கும் . இப்போது சிக்கன் கடைகள் முளைத்தபின்பு கோழி ஈரலும் எங்கும் கிடைக்கிறது . நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார் ," கோழி ஈரல் சாப்பிடக்கூடாது பாஸ் " ஆட்டு ஈரல் சாப்பிடலாம் என்றார் . ஆனால் அவரால் காரணத்தைச் சொல்லி விளக்க முடியவில்லை . வதிதோறும் அசைவக் கடைகள் பரவிவிட்ட நிலையில் இப்போது ஈரல் கிடைப்பது சுலபம் . ஆனால் நண்பர் சொன்னது போல பலருக்கு குழப்பம் இருப்பதை கவனித்திருக்கிறேன் . உயிர்ச்சத்துக்களை சேமித்து வைத்து தேவையானபோது வழங்குவது ஈரலின் முக்கிய பணி . முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது ஈரல் . அனைத்து உயிர்ச்சத்துக்களும் இதில்