Posts

Showing posts from June, 2015

இளமையை பாதுகாக்கும் துளசி உணவுகள்

Image
துளசி, தெய்வீக மூலிகை. இதில் ராமதுளசி, கிருஷ்ண துளசி, வனதுளசி போன்ற வகைகள் உண்டு. கரும்பச்சை நிறத்தில் இருக்கும் கிருஷ்ண துளசி அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. வணதுளசியில் நறுமண எண்ணெய் அதிகம் உள்ளது. துளசியில் இருக்கும் நறுமண எண்ணெய் வகைகள்தான் அதன் மனத்திற்கும் மருத்துவ குணங்களுக்கும் காரணம். துளசியில் இருக்கும் யூஜினால் என்ற வேதிப் பொருள் சளியை அகற்றும் சக்தி கொண்டது. யூஜினால் நீராவி மூலம் துளசியில் இருந்து பிரித்தெடுப்பார்கள். துளசியின் இலை, தண்டு, பூ, வேர் அனைத்திலுமே மருத்துவ குணம் இருக்கிறது. துளசி உஷ்ண வீரிய தாவரம். இது திசுக்களை உலர செய்யும் இயல்புடையது. திசுக்களில் ஆழமாக சென்று நீர் தன்மையை குறைக்கும். அதனால் உடலில் கபமும், வாதமும் சீராகும். வாதம் காரணமாக உடலில் ரத்த ஓட்ட தடை, வலி, வீக்கம் தோன்றும். இவைகளை துளசி சாறு கஷாயம் சீர் செய்யும். வீக்கத்திற்கு துளசி இலையை அரைத்து பற்று போடவேண்டும். கபம் உடலில் அதிகரித்தால் உடல் மந்தம், சோர்வு, தொண்டை கட்டு, சளி, இருமல், மூச்சிரைப்பு போன்றவை உருவாகக்கூடும். அத்தகைய காலகட்டங்களில் துளசி சாறு 50 மி.லி, இஞ்சி சாறு 2 தேக்