Posts

Showing posts from August, 2015

குழந்தைகளின் வயிற்றுப்போக்கை தடுக்கும் வழிகள்!

Image
குழந்தைகளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதை பல பெற்றோர்கள் உணர்வதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை பருகுவதால் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. நீரால் ஏற்பட்ட இந்த நோயை குணப்படுத்த, தண்ணீரே மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை கொடுப்பது அவசியம் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி குழந்தைகளின் உயிர்க்கொல்லி நோய்களில் பாக்டீரியா,வைரஸ் கிருமிகள்,பூஞ்சைக் காளான் எனும் கிருமிகளால் ஏற்படும். இதைத் தவிர்த்து உணவு நச்சுத் தன்மையால் அலர்ஜி ஏற்பட்டு அதன் மூலம் வயிற்றுப்போக்கு உண்டாகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படும் போது குழந்தைகளின் உடலில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறுகிறது. இதனால் குழந்தைகள் நீரிழந்த நிலையை அடைகின்றனர்.ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு நா வறட்சி ஏற்படும். நாடித்துடிப்பு அதிகரித்தும், சிறுநீர் போவது குறைந்தும் காணப்படும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்குடன்  தொடர் வாந்தி,வாயிற்று உப்பசம்,சிறுநீர் அற்றுப் போதல்,குழிவிழுந்த கண்கள்,வேகமான சுவாசம் போன்றவை ஆபத்தா

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பலாக்காய்

Image
பலா: பலா, மர வகையை சார்ந்தது. இது வெப்பநாடுகளில் நன்கு வளரும். கேரளா, தமிழகம், கர்நாடகம், கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பலா அதிகமாக விளைகிறது. கிழக்காசிய நாடுகளான இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் பலா மரங்கள் அதிகம் உள்ளன. பலாப்பழத்தை பற்றியே நாம் அதிகம் அறிந்திருக்கின்றோம். பலா பிஞ்சு மற்றும் இளம் காய் சிறந்த காய்கறி உணவாக பயன்படக்கூடியது. சுவையானது, அதில் பல அரிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இலங்கையில் பலாக்காய் உணவுகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அரிசி உணவுக்கு இணையான அளவு மாவு சத்து இதில் உள்ளதால் பலா மரத்தை ‘அரிசி மரம்’ என்றும் அழைக்கின்றனர். வங்காளதேசத்தில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் பலாக்காய் உணவுகளை உண்டு ஊட்டச்சத்து குறைபாட்டை மக்கள் ஈடு செய்தார்கள். ‘ஏழைகளின் காய்’ என அந்நாட்டில் பலாக்காய் கொண்டாடப்படுகிறது. நம் அண்டை மாநிலமான கேரளாவில் 3 ஆயிரம் வருடங்களாக பலாக்காயை உணவில் பயன்படுத்தி வருகிறார்கள். போர்ச்சுகீசியர்கள் ஆதிக்கத்திற்கு முன்பு வரை அரிசி உணவுகளுக்கு இணையான பலாக்காய் உணவுகள் பயன்படுத்தப்பட்ட

முதுமையை விரட்டி எராளமான நன்மைகள் தரும் நெல்லிக்கனி

Image
நெல்லிக்கனி: மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் நெல்லிக்கனியை வலிமை நெல்லி,உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையானது. நெல்லியின் மருத்துவ குணங்கள் வேறு பழங்களில் இல்லையென்று சொல்லலாம். அந்த அளவிற்கு அதில் மருத்துவ குணங்கள் அதிகம். மனிதனை இளமையாக வைத்துகொள்ள முக்கியமானதாக சொல்லப்படும் காயகல்பத்தில் நெல்லி தான் பிரதான பொருள். மேலும் இது தாது விருத்திக்கும், தலை முடி டானிக்காகவும் பயன்படுகிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. அதனால் கண்களின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு மேன்மையான ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்தால் அந்த நீர் தூய்மையான குடிநீராக மாறிவிடும். 100 கிராம் நெல்லிச்சாற்றில் 82 சதவீதம் நீரும், 0.5 சதவீதம் புரதமும், 0.1 சதவீதம் கொழுப்பும், 14 சதவீதம் மாவுப்பொருளும், 3.5 சதவீதம் நார்ச்சத்தும், 50 யூனிட் அளவு கால்சியமும், 20 யூனிட் பாஸ்பரசும், 1.2 யூனிட் இரும்பும், 600 யூனிட் வைட்டமின்

கொழுப்பை குறைக்கும் சுரைக்காயின் மருத்துவ பயன்கள்.

Image
சுரைக்காய்: உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களில் சுரைக்காயும் ஓன்று. சுரைக்காய் உணவகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்கலன்களாகப் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. சுரைக்காய் 2 அடி நீளம் 3 அங்குலம் விட்ட அளவில் வளரக்கூடிய நீர்சத்து மிகுந்த காய்கறி ஆகும். இது மலிவு விலையில் கிடைக்கும் காய்கறிகளில் ஓன்று. இதில் அதிக சத்து நிறைந்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகெங்கும் சாகுபடி செய்யப்பட்டாலும், இதன் பூர்வீகம் தென்னாப்பிரிக்கா ஆகும். உடம்பில் கொழுப்பை கரைப்பதிலும் சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே. உடலில் கொழுப்புச் சத்து சேர்ந்து அவதிப்படுபவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சுரைக்காயை சூப் செய்து குடிக்கலாம். சுரைக்காய் சூப் தலைமுடி வளர்வதையும் ஊக்கப்படுத்துகிறது. சுரைக்காயில் பாஸ்பரஸ் சத்து அதிகம் உள்ளது. இது எலும்புக்கும், பற்களுக்கும் வலு கொடுக்கிறது. ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சுரைக்காய் நல்ல