முதுமையை விரட்டி எராளமான நன்மைகள் தரும் நெல்லிக்கனி
நெல்லிக்கனி:
மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும்
நெல்லிக்கனியை வலிமை நெல்லி,உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர்.
ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையானது.
நெல்லியின் மருத்துவ குணங்கள் வேறு பழங்களில்
இல்லையென்று சொல்லலாம். அந்த அளவிற்கு அதில் மருத்துவ குணங்கள் அதிகம். மனிதனை இளமையாக
வைத்துகொள்ள முக்கியமானதாக சொல்லப்படும் காயகல்பத்தில் நெல்லி தான் பிரதான பொருள்.
மேலும் இது தாது விருத்திக்கும், தலை முடி டானிக்காகவும் பயன்படுகிறது. இதில்
வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. அதனால் கண்களின் பாதுகாப்புக்கு மிக
முக்கியமானதாக இருக்கிறது. நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு
எடுத்து சாப்பிட்டு மேன்மையான ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன்
நெல்லிச்சாறு கலந்தால் அந்த நீர் தூய்மையான குடிநீராக மாறிவிடும். 100 கிராம் நெல்லிச்சாற்றில் 82 சதவீதம் நீரும், 0.5 சதவீதம் புரதமும், 0.1 சதவீதம் கொழுப்பும், 14 சதவீதம் மாவுப்பொருளும், 3.5 சதவீதம் நார்ச்சத்தும், 50 யூனிட் அளவு கால்சியமும், 20 யூனிட் பாஸ்பரசும், 1.2 யூனிட் இரும்பும், 600 யூனிட் வைட்டமின் ‘சி’ யும் உள்ளன.
இது பல் நோய், அஜீரணம், மூட்டு வலி ஆகியவற்றை
குறைக்கிறது. அருமையான கண் பார்வையை தரும். நீண்ட ஆயுளுக்கு தினமும் நெல்லிச்சாறு
அருந்த வேண்டும். பசியின்மை விலகி நல்ல பசியை உணர வைக்கும். மாதவிடாய்,
மலச்சிக்கல், மூலம் போன்றவை குணமாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு,
ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும். நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் ‘சி’
குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது. முதுமையை தடுக்கும்
குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என
உரைத்திருக்கின்றனர். நெல்லிக்கனி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை
விரட்டும் தன்மை கொண்டது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து
உடலைக் காத்து முதுமையை துரத்தி, என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச்
செய்யும் சக்தி இதற்க்கு உண்டு. பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும்
முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள
கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.
Comments
Post a Comment