கேரட்,வெள்ளரி மருத்துவ பயன்கள்
கேரட்டை தோல் சீவக்கூடாது. தோலுக்கு நெருக்கமாகத் தான் தாதுக்கள் உள்ளன. பச்சையாகவோ, சமைத்தோ உண்ணக் கூடிய கிழங்கு இது. அல்வா போன்ற இனிப்பு செய்யவும், குழம்பு, பொரியலை செய்யவும் கேரட் பயன்படும்.
கேரட் சாறு குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஆரோக்கியம் அளிக்கிற பானம். கண்களுக்கு வலிமையைத் தரும். பெண்களுக்கு கேரட் விதைகளை தங்களுடைய கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பப்பையின் சுவர்களில் அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி கருச்சிதைவுக்கு காரணமாகும்.
சாப்பாட்டிற்கு பிறகு ஒரு கேரட்டை மென்று தின்றால் கெடுதல் விளைவிக்கக்கூடிய கிருமிகள் அழிந்துவிடும். பற்களைச் சுத்தமாக்கும். ஈறுகளில் இரத்தம் கசிவதைத் தடுக்கும். பற்சிதைவையும் தடுக்கும்.
கேரட் சூப் வயிற்ருப்போக்கை குணப்படுத்தும் ஒரு இயற்கை நிவாரணி, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை தாராளமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும். கேரட்டை அரைத்து அரைவேக்காடு முட்டையும், தேனும் கலந்து உண்டால் ஆண்மை சக்தி பெருகும்.
கேரட் விதை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு கோப்பை பசும்பாலில் வேகவைத்து பருகினால் பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் பெருகும். மாதவிடாய் சீராகும். வெள்ளைப்படுவது நிற்கும்.
புற்றுநோய், எலும்புருக்கி, சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள் கேரட்சாறுடன் பாலும் தேனும் கலந்து பருக நல்ல பலன் கிடைக்கும்.
வெள்ளரி:
வெள்ளரி (ஆங்கிலம் : Cucumber) என்பது ஒரு வகைக் கொடி. இதலிருந்து பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.
வெள்ளரி ஸாலட் தயாரிப்பிலும், சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது. ஊறுகாய் தயாரிக்கலாம். சமைத்தும் உண்ணாலாம்.பச்சையாக உண்ணாலாம். கோடையில் உண்ண குளுமை அடையும். பித்தத்தைக் குறைக்கும் சீரணத்துக்கு உதவும். தாகத்தைத் தணிவிக்கும் ஒவ்வாமையைத் தடுக்கும்.
மற்ற காய்கறி, தானியங்கள், கொட்டைகளுடன் வெள்ளரியை சேர்த்து உண்ண அவற்றின் சத்துக்கள் மேம்படும் வழக்கமாக தக்காளி, முள்ளங்கி, லெட்டூஸ்,பீட், கேரட்டுடன் ஸாலட் செய்வதில் பயன்படும். ஸாலட் வகையுடன் தயிர் சேர்த்து உண்ண அது ஊட்டச்சத்து மிக்க சுவையான உணவாகிவிடும்.
தினமும் இரண்டு வெள்ளரி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது ஒரு நம்பகமான மலமிளக்கி.
கீழ் வாதத்தில் அவதிப்படும் நோயாளிகளுக்கு வெள்ளரிச் சாற்றுடன் கேரட், பீட்ரூட் சாறும் கலந்து கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
வெள்ளரிப்பழ சாற்றுடன் உப்பு அல்லது சர்க்கரையைக் கலந்து பருகிட தாகம் தணிந்து புத்துணர்ச்சி உண்டாகும். வெள்ளரி விதைகளை வெய்யிலில் உலர்த்தி தோலைப் பிரித்தெடுத்தால் உள்ளிருக்கும் பருப்பை மருந்தாக பயன்படுத்த முடியும். காய்ச்சிய பாலில் வாதுமைப் பருப்பையும் வெள்ளரி விதிகளையும் ஊறவைத்து தென் கலந்து பருக உடம்புக்கு வலிமை கிடைக்கும்.

Comments
Post a Comment