அரைக்கீரை மற்றும் பொன்னாங்கண்ணி கீரைகளில் உள்ள சத்துக்கள்!
அரைக்கீரை:
அரைக்கீரை (ஒலிப்பு) அல்லது குப்பை கீரை என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் கீரைகளில் ஒன்றாகும். சித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர் சன்னி, கப நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக இக்கீரை கூறப்பட்டுள்ளது. தோசை, கூட்டு, சூப், கூட்டல், வடை, மசியல் என பல வகைகளில் அரைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது கீரையாகத் தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும். ஆப்பிரிக்காவிலும் போற்றி உண்ணப்படுகிறது. அரைக்கீரை உடலுக்கு வெப்பத்தை கொடுப்பதினால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஒரு முக்கிய உணவாக அளிக்கபடுகிறது. அதோடு பிரசவத்தால் எற்படும் உடல் மெலிவை போக்கி, உடலுக்குச் சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றது.
பொன்னாங்கண்ணி:
பொன்னாங்கண்ணி அல்லது பொன்னாங்காணி (தாவரவியல் பெயர்: (Alternanthera sessilis) ஒரு ஈரப்பாங்கான இடங்களில் வாழும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை, சீதேவி என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். மருத்துவத் தேவைகளுக்காகப் பயிரிடப்படுகிறது. பொன்னாங்கண்ணியில் சீமைப்பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகை உண்டு.
சத்துக்கள்
இந்தக் கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை உள்ளன. பொன்னாங்கண்ணிக்கீரை குளிர்ச்சியை தரவல்லது. இதில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள், பல ஸ்டிரால்கள், அமிலங்கள் உள்ளன. சிட்ரோஸ்டிரால், சிட்சுமோஸ்டிரால், கெஃம்பெஸ்டிரால், ஓலியனோலிக் அமிலம், லுபியால் போன்றவை பெரான்னாங்கண்ணியில் காணப்படுகின்றன.
பயன்கள்
- · வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் நிறைவாக உள்ளன.
- · நுரையீரல் சார்ந்த நோய்கள் மற்றும் கபத்துக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
- · ரத்தத்தைச் சுத்திகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
- · உடலுக்கு வெப்பத்தை அளிக்கக் கூடியது. அரைக்கீரைச் சாறுடன் மிளகு, சீரகம் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்துவந்தால், சளி, இருமல் நீங்கும்.
- · நரம்புத்தலர்ச்சியைப் போக்கும். நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைச் சீராக்கும். சோர்வைப் போக்கும். சோர்வைப் போக்கும். உடலுக்குச் சுருசுருப்பளிக்கும்.
பொன்னாங்கண்ணி அல்லது பொன்னாங்காணி (தாவரவியல் பெயர்: (Alternanthera sessilis) ஒரு ஈரப்பாங்கான இடங்களில் வாழும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை, சீதேவி என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். மருத்துவத் தேவைகளுக்காகப் பயிரிடப்படுகிறது. பொன்னாங்கண்ணியில் சீமைப்பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகை உண்டு.
சத்துக்கள்
இந்தக் கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை உள்ளன. பொன்னாங்கண்ணிக்கீரை குளிர்ச்சியை தரவல்லது. இதில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள், பல ஸ்டிரால்கள், அமிலங்கள் உள்ளன. சிட்ரோஸ்டிரால், சிட்சுமோஸ்டிரால், கெஃம்பெஸ்டிரால், ஓலியனோலிக் அமிலம், லுபியால் போன்றவை பெரான்னாங்கண்ணியில் காணப்படுகின்றன.
பயன்கள்
- · ‘மேனிக்கு பொன்’ போன்ற அழகையும் மினுமினுப்பையும் தருவதுதான் பொன்னாங்கண்ணிக் கீரை.
- · வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, பீட்டாகரோட்டின் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன்.
- · காசநோய், கண் நோய், உடல் உஷ்ணம், வாதம், கபம் ஆகியவற்றைப் போக்கும். கண் நோய்களைக் குணமாக்கும்.
- · ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூலச்சூடு நீங்கும்.
- · பித்த மயக்கம், கைகால் எரிச்சலைப் போக்கும்.
- · வாய்ப்புண், வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும். கல்லீரல் நோய்களுக்குச் சிறந்த மருந்து.
Comments
Post a Comment