Posts

Showing posts from September, 2018

ஆரோக்கியம் காக்கும் நிலக்கடலையின்(Peanut) மருத்துவ பலன்கள்.

Image
நிலக்கடலை   அல்லது   வேர்க்கடலை   அல்லது   கச்சான்   (peanut ) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும்   கொட்டைகளைத்   தரும் பருப்பு வகை   தாவரம்   ஆகும். இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா , இந்தியா , நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன. இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை , மணிலாக்கடலை , கடலைக்காய் , மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை   காந்தியடிகளுக்குப்   பிடித்த உணவாகும். பலகாரம் செய்வதெல்லாம் கடலைஎண்ணெயில்தான் இருக்கும் தினசரி சமையலுக்கும் தாளிக்கவும் தான் தலைக்குவைத்துக்கொள்ள தேங்காய் எண்ணெய் , தலைதேய்த்துக்குளிக்க நல்லெண்ணெய் வேறு எண்ணெய்யைப்பற்றி கேள்விப்பட்ட்தில்லை . நிறைமாத கர்ப்பிணிகள் இருந்தால் ஆமணக்கு எண்ணெய் தயாராக இருக்கும் அதிலும் சிற்றாமணக்கு என்றால் கொஞ்சம் சிறப்பு . செக்குவைத்து எண்ணெய் எடுத்துத்தர ஒரு சாதி உண்டு

இயற்கை தந்த அற்புத வரம் தென்னை இளநீர்

Image
கடுமையான தலைவலியில் நடந்துகொண்டிருந்தேன். வெயில்காலத்தின் மாலையில் வயலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன். மாத்திரை வாங்கவேண்டுமானால் ஒரு கிலோமட்டர் திரும்பிவரவேண்டும் என்னையறியாமல் தென்னைமரத்தை நோக்கிப்போனேன். ஒரு குச்சியை எடுத்து சிறியமரத்திலிருந்த இளநீரைப்பறித்தேன். அப்போதுதான் நீர்பிடிக்க ஆரம்பித்திருந்தது. கத்தியால் வெட்டவேண்டிய அவசியம் இல்லை. குச்சியில் ஒட்டைபோட்டு குடித்துவிடலாம் கொஞ்சம் துவர்ப்பாக இருந்தது . முதல் இளநரைக் குடித்துமுடித்தவுடன் தலைவலி காணாமல் போயிருந்தது . நிலத்தடிநீர் கிராமத்தின் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது இன்று அந்த மரம் பட்டுப்போய்விட்டது. தென்னை நம்முடைய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்திருக்கிறது வயசுக்கு வந்தால் குடிசை கட்ட தென்னைஒலை சாவுக்கு தென்னை ஒலை . வெயில் காலத்தில் கூரை மதுபோட தென்னைஒலை . மரம் இருக்கும் வடுகளில் பருப்பைக்காயவைத்து எண்ணெய் ஆடிக் கொள்வார்கள். குளித்துவிட்டு தலைக்கு எண்ணெய் வைக்காதவர்கள் திட்டுவாங்க வேண்டியிருக்கும். நல்ல காரியமோ , கெட்ட காரியமோ நமக்குத் தேங்காய்வேண்டும் உயிர்பிரிந்தவுடன் தேங்காய் உடைப

காபி குடிக்கலாமா? வேண்டாமா?

Image
நெடுஞ்சாலைகளில் இப்போது அதிகம் காபிக்கடைகள் முளைத்திருக்கின்றன. கடைகளில் பெரும்பான்மையாக உடனடி காபிதான் கிடைக்கிறது. பலர் ஜலதோஷம் பிடித்துகொண்டால் காபியை விரும்பிக் குடிக்கிறார்கள். ஒரு கப் காபி, கொஞ்சம் அரட்டை என்பது நடைமுறையில் வழக்கமாகிவிட்டது. கிராமத்துப் பெருசுகள் டீயை காபி என்று கேட்பார்கள். கடைக்காரர் டீ போட்டுக்கொடுப்பார். டீ, காபியில் உள்ள காபீன் சோர்வை நீக்கி சுகமாக உணரவைக்கிறது. நரம்பு மண்டலத்தைத் தூண்டி இந்த விளைவைத்தருகிறது. இன்ஸ்டண்ட் காபியில் உள்ள காபீன் அளவு டிகிரி காபியில் உள்ளதைவிட குறைவு. கிட்டத்தட்ட பாதியளவுதான் இருக்கிறது. ( 50 மி.கி) ஒரு ஸ்ட்ராங்கான டீயிலும் இந்த அளவு இருக்கும். சில மருந்துகளிலும் காபீன் உண்டு. காலையில் சிற்றுண்டியுடன் காபி குடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. டிபன் சாப்பிட்டவுடன் எனக்கு காபி வேண்டும் என்பார்கள். இரவிலும்கூட இதை பரவலாக பார்க்கமுடிகிறது. சாப்பிட்டவுடன் டீ, காபி குடிப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை. இரும்புச்சத்து உடலில் சேராமல் தடுத்துவிடும் தன்மை டீ, காபிக்கு உண்டு. உணவுக்கு ஒருமணி நேரம் முன்பும் பின்பும் டீ, காபி