புதினாவின் நன்மைகள்
புதினாவின் அளவிடமுடியாத நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்!
உணவே மருந்து என்பது தமிழர்களின் பாலபாடம். நம்
முன்னோர்கள் தங்களுக்கு வரும் நோய்களை, உணவில் மாற்றங்கள் செய்ததன் மூலம் போக்கிக்
கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்களின் உணவில் அடிக்கடி இடம்பெறும் ஒரு தாவரம்
புதினா. மடிந்த விளிம்புகளுடன் கூடிய பச்சைப் பசேலென்ற இலைகளுடன் காணப்படும்
புதினா அபாரமான மனமும்,ருசியும் கொண்டது. புதினா ஒரு புதிரான தாவரமும் கூட.
புதினாவில் வயல் புதினா, காரன் புதினா, ஜப்பானிய
புதினா, கோசி, பேப்பர் மின்ட் என்பன உள்பட 40 வகை புதினாக்கள் இருக்கின்றன. இதில் ஏ,பி,சி
வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்பு,
நார், புரதம் என்று பல்வேறு சத்துகளும் நிரம்பி உள்ளன.
இதில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட் பொருட்கள்
பெருங்குடல் புற்றுநோயை தீர்க்கும் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. 5 ரூபாய்க்கு கை நிறைய கிடைக்கும் புதினாவில் உள்ள
மருந்து வசக்தி அபாரமானது. பத்து புதினா இலைகளை கழுவி பச்சையாக அப்படியே மென்று
சாப்பிடலாம். அல்லது புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். புதினா,
வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றிப் போக்கு
உள்பட பல வயிற்றுப் கோளாறுகளை தீர்த்து விடுகிறது. இதன் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து
தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும்,
அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்கும்.
மேலும் காய்ச்சல், நீர்க்கடுப்பு, செரிமானம் ஆவதில் பிரச்சனை போன்றவை இருந்தால்
புதினா சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இந்த பாதிப்புகள் நீங்கி விடும்.
3 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு புதினாச்சாறு
அளித்து வந்தால் வயிற்றிக் கோளாறுகள் குணமாகி குழந்தைகளுக்கு வீரிட்டு அழுவது
நிற்கும். புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண்,
சொறி, சிரங்கு நீங்கும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் ‘மென்தால்’ என்ற
எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினாவில் இருந்து காதுவலி, வீக்கம், சைனஸ்,
மூட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.
புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்த
அளவு தீயில், நீர் சேர்க்காமல் வதக்கி எடுத்து உடலில் வலி, குடைச்சல் இருக்கும்
பாகங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். மூட்டுவலிக்கு இந்த முறை சிறந்த
பயனளிக்கும். புதினாவை பற்றிய ஆராய்சிகள் இன்றும் உலக அளவில் நடந்த வண்ணம் உள்ளன.
இதன்மூலம் புதினாவை பற்றிய பல புதிய தகவல்கள் தெரிய வாய்ப்புகள் உள்ளன. எனவே நாமும்
உணவில் புதினாவை பயன்படுத்தி உடலுக்கு தேவையான சத்துக்களை பெறுவோம் நோயின்றி நலமுடன்
வாழ்வோம்.
Comments
Post a Comment