Posts

Showing posts from October, 2015

இருமல்,இரைப்பை நோய்களை நீக்கும் இஞ்சி மருத்துவ பயன்கள்

Image
இஞ்சி: மணமுள்ள கிழங்குகளையுடைய சிறு செடி, எல்லாக் காய்கறிக் கடைகளிலும் கிடைக்கும். தமிழகமெங்கும் பரவலாகப் பயிரிப்படுகிறது. கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. உலர்த்திப் பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் சுக்கு எனப்படும். மருந்துக் கடைகளில் கிடைக்கும். வியர்வை உமிழ்நீர்ப் பெருக்கியாகவும், பசித் தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயற்படும். இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச் சாறு வகைக்கு 30 மி.லி யுடன் தேன் 15 மி.லி கலந்து 15 மி.லி அளவாக அடிக்கடி கொடுத்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் தீரும். வெங்காயச் சாறுக்குப் பதிலாக எலுமிச்சைக் சாற்றையும் பயன்படுத்தலாம். இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு வகைக்கு 15 மி.லி தேன் கலந்து 15 மி.லி அளவில் 3 வேலையாகச் சாப்பிட்டு வர இருமல், இரைப்புத் தீரும். 200 கிராம் இஞ்சி தோல் நீக்கிச் துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் ( 45 நாள்கள்) சாப்பிட உடல் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சுவலியும் மனத்திடமும் பெற்று ம

ஆணைக் கற்றாழை மருத்துவப் பயன்கள்.

Image
ஆணைக் கற்றாழை: பெரிய மடல்களையுடைய கற்றாழை இனம். இராகாசிமடல், ரயில் கற்றாழை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் நாருக்காக வறட்சியான இடங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மடல், குருத்தின் கீழ் உள்ள கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சிறுநீர் பெருக்குதல் உடல் தேற்றுதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது. ஆணைக்கற்றாழை மடலை வாட்டிப்பிழிந்து சாற்றில் போதுமான அளவு கேழ்வரகு மாவையோ மூசாம்பரப் பொடியையோ கலந்து கொதிக்க வைத்து வீக்கமுள்ள இடங்களில் பற்றுப்போட வீக்கம் கரையும். 50 கிராம் மடலுடன் 25 கிராம் நன்னாரி வேரைப் பொடித்துப் சேர்த்து ஒரு லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை,மதியம் மாலை 30 மி.லி யாகக் குடித்து வரப் பாலியல் நோயான கொறுக்குப் புண், கிரந்தி ஆகியவை தீரும். குருத்தின் கீழ் உள்ள மென்மையான கிழங்குப் பகுதியை எடுத்து சர்க்கரை கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர வெள்ளை குணமாகும். ஆணைக்கற்றாழை வேரை 30 கிராம் நசுக்கி 1 லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டிப் பாதிப்பாதியாய் காலை மாலை குடித்து வர சிறுநீரைத் தாரளமாக வ

ரோஜாவின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

Image
மலர்களில் ரோஜாவுக்கு தனி மகத்துவம் உண்டு. அழகு, மணம் என்று எவரையும் கவர்ந்துவிடக்கூடியது ரோஜா. அழகு, அன்பு, கனிவு, மென்மை போன்ற பண்புகளின் சின்னமாக விளங்கும் ரோஜா, வெளிநாட்டில் இருந்து தான் இந்தியாவுக்குள் புகுந்தது. ரோஜா, மலர்களில் மட்டும் ராணி அல்ல. மருத்துவப் பயன்பாட்டுக்கும் ராணியாகத் திகழ்கிறது. ரோஜா மலரானது இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. இதன் இதழ் புண்களை ஆற்றும். உடல் பலம் தந்து இதயம்,  நரம்புமண்டலத்திற்கு நன்மை தருகிறது. தொண்டைநோய், சளி, இருமல், சுவாசநோய், நாவறட்சியைக் குணமாக்கும். ரோஜா இதழ்களில் உள்ள துவர்ப்புச் சுவை, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். ரோஜாப் பூவினால் தயாரிக்கப்படும் ‘குல்கந்து’ மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்தது. உஷ்ணம் காரணமாக ஏற்படும் வயிற்றுவலி நீங்க இது உதவும். ரோஜா இதழில் தயாராகும் பன்னீர், மயக்கத்தையும், மனக் கவலையையும் போக்கும். ரோஜாப் பூவைக் கொண்டு தயார் செய்யப்படும் இனிய சுவையுள்ள சர்பத், ரத்த விருத்திக்கு பயனுள்ள ஒரு டானிக் ஆகும். இந்த ரோஜாப் பூ சர்பத் உடல் உஷ்ணத்தை எப்போதும் நீக்கி புதிய உற்சாகத்தை அளிக்கும். ரோஜ