ஆணைக் கற்றாழை மருத்துவப் பயன்கள்.
ஆணைக் கற்றாழை:
பெரிய மடல்களையுடைய கற்றாழை இனம். இராகாசிமடல்,
ரயில் கற்றாழை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும்
நாருக்காக வறட்சியான இடங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மடல், குருத்தின் கீழ்
உள்ள கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
சிறுநீர் பெருக்குதல் உடல் தேற்றுதல் ஆகிய
மருத்துவ குணங்களை உடையது.
- ஆணைக்கற்றாழை மடலை வாட்டிப்பிழிந்து சாற்றில் போதுமான அளவு கேழ்வரகு மாவையோ மூசாம்பரப் பொடியையோ கலந்து கொதிக்க வைத்து வீக்கமுள்ள இடங்களில் பற்றுப்போட வீக்கம் கரையும்.
- 50 கிராம் மடலுடன் 25 கிராம் நன்னாரி வேரைப் பொடித்துப் சேர்த்து ஒரு லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை,மதியம் மாலை 30 மி.லி யாகக் குடித்து வரப் பாலியல் நோயான கொறுக்குப் புண், கிரந்தி ஆகியவை தீரும்.
- குருத்தின் கீழ் உள்ள மென்மையான கிழங்குப் பகுதியை எடுத்து சர்க்கரை கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர வெள்ளை குணமாகும்.
- ஆணைக்கற்றாழை வேரை 30 கிராம் நசுக்கி 1 லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டிப் பாதிப்பாதியாய் காலை மாலை குடித்து வர சிறுநீரைத் தாரளமாக வெளிப்படுத்தும்.
- மடலைக் குழகுழப்பாகுமாறு துவைத்து வலியுள்ள இடங்களில் வைத்துக்கட்ட வலி குணமாகும்.
- மடல் சாற்றை அடிபட்ட காயங்களின் மீது தடவி வைக்க சீழ்ப்பிடிக்காமல் ஆறும்.
Comments
Post a Comment