ரோஜாவின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!


மலர்களில் ரோஜாவுக்கு தனி மகத்துவம் உண்டு. அழகு, மணம் என்று எவரையும் கவர்ந்துவிடக்கூடியது ரோஜா.

அழகு, அன்பு, கனிவு, மென்மை போன்ற பண்புகளின் சின்னமாக விளங்கும் ரோஜா, வெளிநாட்டில் இருந்து தான் இந்தியாவுக்குள் புகுந்தது. ரோஜா, மலர்களில் மட்டும் ராணி அல்ல. மருத்துவப் பயன்பாட்டுக்கும் ராணியாகத் திகழ்கிறது.

ரோஜா மலரானது இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. இதன் இதழ் புண்களை ஆற்றும். உடல் பலம் தந்து இதயம், நரம்புமண்டலத்திற்கு நன்மை தருகிறது. தொண்டைநோய், சளி, இருமல், சுவாசநோய், நாவறட்சியைக் குணமாக்கும்.

ரோஜா இதழ்களில் உள்ள துவர்ப்புச் சுவை, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். ரோஜாப் பூவினால் தயாரிக்கப்படும் ‘குல்கந்து’ மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்தது.

உஷ்ணம் காரணமாக ஏற்படும் வயிற்றுவலி நீங்க இது உதவும். ரோஜா இதழில் தயாராகும் பன்னீர், மயக்கத்தையும், மனக் கவலையையும் போக்கும்.

ரோஜாப் பூவைக் கொண்டு தயார் செய்யப்படும் இனிய சுவையுள்ள சர்பத், ரத்த விருத்திக்கு பயனுள்ள ஒரு டானிக் ஆகும். இந்த ரோஜாப் பூ சர்பத் உடல் உஷ்ணத்தை எப்போதும் நீக்கி புதிய உற்சாகத்தை அளிக்கும்.
ரோஜாவில் சர்க்கரை, துவர்ப்பு, வைட்டமின் சி ஆகியவை அதிகம் உள்ளன. ரோஜா எண்ணெய் புண்களை ஆற்றும். காதுவலி மற்றும் பல் ஈறுகளில் ஏற்படும் புண்ணுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

ரோஜா இதழ்களை தேவையான அளவு சேகரித்து சம அளவு பாசிப்பயறு சேர்த்து நாலைந்து பூலாங்கிழங்கையும்  உடன் வைத்து விழுதாக அரைத்து அதை உடல் முழுவதும் தேய்த்து சிறிதுநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தேய்த்துக் குளித்தால் உடல் கவர்ச்சிகரமான நிறம் பெரும். சரும நோய்கள் நீங்கும்.

இதை, தினமும் குளிக்கும்போது சோப்புக்கு பதில் பயன்படுத்தலாம். ரோஜாவினால் தயாரிக்கப்படும் கஷயமானது வாதம், பித்தத்தை அகற்றும் தன்மை உடையது.


இப்படி ரோஜா அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆக, இனி ரோஜாவை அழகுக்கு மட்டுமின்றி, ஆரோக்கியத்துக்கும் பயன்படுத்துவோம்!

Comments

Popular posts from this blog

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?