காபி குடிக்கலாமா? வேண்டாமா?


நெடுஞ்சாலைகளில் இப்போது அதிகம் காபிக்கடைகள் முளைத்திருக்கின்றன. கடைகளில் பெரும்பான்மையாக உடனடி காபிதான் கிடைக்கிறது. பலர் ஜலதோஷம் பிடித்துகொண்டால் காபியை விரும்பிக் குடிக்கிறார்கள். ஒரு கப் காபி, கொஞ்சம் அரட்டை என்பது நடைமுறையில் வழக்கமாகிவிட்டது. கிராமத்துப் பெருசுகள் டீயை காபி என்று கேட்பார்கள். கடைக்காரர் டீ போட்டுக்கொடுப்பார்.

டீ, காபியில் உள்ள காபீன் சோர்வை நீக்கி சுகமாக உணரவைக்கிறது. நரம்பு மண்டலத்தைத் தூண்டி இந்த விளைவைத்தருகிறது. இன்ஸ்டண்ட் காபியில் உள்ள காபீன் அளவு டிகிரி காபியில் உள்ளதைவிட குறைவு. கிட்டத்தட்ட பாதியளவுதான் இருக்கிறது. (50 மி.கி) ஒரு ஸ்ட்ராங்கான டீயிலும் இந்த அளவு இருக்கும். சில மருந்துகளிலும் காபீன் உண்டு.


காலையில் சிற்றுண்டியுடன் காபி குடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. டிபன் சாப்பிட்டவுடன் எனக்கு காபி வேண்டும் என்பார்கள். இரவிலும்கூட இதை பரவலாக பார்க்கமுடிகிறது. சாப்பிட்டவுடன் டீ, காபி குடிப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை. இரும்புச்சத்து உடலில் சேராமல் தடுத்துவிடும் தன்மை டீ, காபிக்கு உண்டு. உணவுக்கு ஒருமணி நேரம் முன்பும் பின்பும் டீ, காபி தவிர்க்கவேண்டும்.

இந்தியாவில் இரும்புச்சத்து பற்றாக்குறை உள்ளவர்கள் ஐம்பது சதவிகிதம் என்கிறது ஆய்வுமுடிவு. இந்தியர்களுக்கு வலிமை இல்லை என்று பொருள். நம்முடைய பழக்கவழக்கங்கள்கூட இதற்குக் காரணம் ஆகலாம். இரும்புச்சத்து பற்றாக்குறையால் அடிக்கடி சோர்ந்து போக வேண்டியிருக்கும். ஆக்ஸிஜனை திசுக்களுக்குக் கொண்டுசெல்வது இதுதான்.


அதிக அளவு காபி இதய நோயைக்கொண்டு வரலாம். பதட்டத்தை அதிகரிக்கச்செய்யும். ரத்த அழுத்தம் உள்ளவர்களை காபியை தவிர்க்குமாறு மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் அருந்தக்கூடாது. கெட்ட கொலஸ்ட்ரால் தன்மை காபிக்கு உண்டு. ஆரோக்கியமாக இருப்பவர்களும் நாளுக்கு இரண்டு கப்புக்கு மேல் வேண்டாம்.

டீ மற்றும் காபியை ஒப்பிட்டால் டீ எவ்வளவோ மேலாக இருக்கும். கலப்படம் இல்லாத டீத்தூள் உள்ள கடைகளாக இருக்கவேண்டும். இப்போது கிரீன் டீ பயன்பாடு அதிகரித்திருக்கிறது. பரவலாக கடைகளில் பார்க்கமுடிகிறது. விலை அதிகம் என்றாலும் உடல்நலனைக் காப்பற்றிக்கொள்ள தேர்ந்தேடுக்கலாம்.

Comments

Popular posts from this blog

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?