முருங்கைக் கீரையில் என்னென்ன சத்துக்கள் உள்ளன.
‘கீரை உடலுக்கு மிகவும் நல்லத’ என்று யாரைக் கேட்ட்டலும் சொல்வார்கள். ஆனால், வாரத்துக்கு ஒருநாள் கூட கீரை சேர்த்துக்கொள்ளாத குடும்பங்கள்தான் நம் ஊரில் அதிகம். கீரைகள் ஊட்டச்சத்துக்கள், தாதஊப்புக்களின் சுரங்கம், வைட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம், மக்னிசியம், பீட்டாகரோடின், நுண்ட்டச்சத்துக்கள் என அனைத்தும் கீரைகளில் நிறைந்துள்ளன.
கலோரி மிகக் குறைவு என்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க இது சிறந்த உணவு. நார்ச்சத்து நிறைந்தது என்பதால், செரிமானப் பிரச்னையைத் தவிர்க்கிறது. புற்றுநோய், இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. அதிக மக்னீசியம், குறைவான கிளைசமிக் இன்டெக்ஸ் கொண்டதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
தினம் ஒரு கீரையை சேர்த்துக்கொள்வதன் மூலம் தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் தவிர்க்க முடியும்.
கீரைகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன. அவற்றின் பலன் என்ன என்பதை பாப்போம்.
முருங்கைக் கீரை
முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ உண்ணப்படும் ஒரு உணவு ஆகும். இதில் "muringa" என்ற பெயர், "முருங்கை" என்ற தமிழ் வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.
முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.
முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஆரம்பம் இமயமலை அடிவாரம் பின் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும். பிலிப்பைன்சிலும் ஆப்பிரிக்காவிலும் அதிகமாக இருந்துள்ளது. இது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலும் காணப்படுகிறது. தாய்லாந்து, தாய்வானிலும் இது பயிராகிறது.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள், வைட்டமின் பி மற்றும் சி, நார்ச்சத்து நிறைவாக உள்ளன.
எலும்பு, பற்கள் வலுப்பெறும், ரத்தசோகையைக் கட்டுபடுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆண்மையைப் பேருக்கும்.
உடல் வெப்பத்தைத் தணிக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலியைத் தடுக்கும்.
கை, கால் வலி, மூட்டுவலியைக் குணமாக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.
செரிமானக் கோளாறு, மந்தத்தன்மை ஆகியவற்றைக் குறைக்கும்.
முருங்கைக்கீரைச் சாற்றைத் தலைக்குத் தேய்த்து குளித்துவந்தால், பொடுகுப் பிரச்னை தீரும்.
Comments
Post a Comment