கைகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருங்கள்!


கைகளை சுத்தமாக வைத்திருப்பதே நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவும். கைகளில் படிந்திருக்கும் கிரிமிகள், உடலுக்குள் சென்று பல்வேறு உபாதைகளுக்கு காரணமாகிவிடுகின்றன. அதனால் நன்றாக கைகளை கழுவ வேண்டும். எப்படி தெரியுமா?

சாப்பிடுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 20 நொடிகளாவது சோப்பிட்டு கைவிரல்களை தேய்த்து கழுவ வேண்டும். விரல் இடுக்குகளை சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈ.கோவை போன்ற பாக்டீரியாக்கள் அதிலிருந்து நோய் பாதிப்புக்கு உள்ளாகி விடும். கைகளை கழுவிய பிறகே ஈரப்பதமான நிலையிலேயே உலர வைத்து விடக்கூடாது. தவளை கொண்டு துடைக்க வேண்டும். மூன்று முறைக்கு மேல் தவளை துவைக்காமல் பயன்படுத்தக்கூடாது. அடுத்தவர்களின் தவளையும் உபயோகப்படுத்தக் கூடாது.

நோய்வாய்ப்டிருப்பவர்களை பார்த்து நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் வீடு திரும்பியதும் மறக்காமல் கைகளை கழுவி விட வேண்டும். காயங்களுக்கு மருந்திட்டுவதற்கு முன்பும், பின்பும், கைவிரல்களை சுத்தமாக தேய்த்து கழுவுங்கள். ஒரு சிலர் காயங்களுக்கு மருந்து போட்ட பிறகுதான் கைகளை கழுவுவார்கள். அது தவறான பழக்கம். கைகளில் படிந்திருக்கும் கிருமிகள் காயங்களில் படிந்து பாதிப்பை உருவாக்கி விடும். அதனால் வருவதற்கு முன்பும் கழுவ வேண்டும்.

கழிவறையை பயன்படுத்திய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும்.வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டி விட்டு வீடு திரும்பியதும் கைகளை கழுவுவது அவசியமானது.வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளுடன் விளையாடினால் உடனே கைகளை சோப்பு போட்டு கழுவி விட வேண்டும். இறைச்சி, முட்டை போன்ற உணவு வகைகளை சாப்பிட்ட பிறகு சோப்பு போட்டு கழுவுவது நல்லது.

Comments

Popular posts from this blog

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?