உலர் திராட்சை குறித்த உண்மை தகவல்
நாம் அதிகம் அறியாத உணவுப்பொருட்களிலும்கூட பல ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான், ‘கிஸ்மிஸ்’ எனப்படும் உலர் திராட்சை. உலர் திராட்சை குறித்த சில உண்மைகளை இங்கு பார்ப்போம்... சாதாரண திராட்சைப் பழத்தைவிட உலர் திராட்சையில் வைட்டமின் அதிகம் உள்ளன. அமினோ அமிலங்கள்,பொட்டாசியம்,சுக்ரோஸ்,மெக்னீசியம்,கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். மஞ்சள்காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இருவேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின் காலையிலும்,மாலையிலும் 25 உலர் திராட்சைப் பழங்களை சாப்பிட்டுவந்தால் மூலநோய் பாதிப்பில் இருந்து மீளலாம். மலச்சிக்கலால் தவிப்பவர்கள், உலர் திராட்சையை இரவு உறங்கும்முன் ஒரு கைபிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் தெரியும். இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு, காலையில் கண்விழித்ததும் உலர் திராட்சையை நசுக்கி, அதன் சாற்...