உங்கள் அன்பு குழந்தைகள் நலமாக வளர
குழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைதான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் பருவத்தில் இருந்தே சில ஹெல்த்தி விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு மற்றும் பொது சுகாதாரம் குறித்துச் சொல்லிக்கொடுக்க வேண்டியவை இதுதாங்க... தண்ணீர் பாட்டில் பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க சொல்லித்தர வேண்டும். டி ஃப ன் பாக்ஸ் அதேபோல், பிளாஸ்டிக்கால் ஆன டி ஃப ன் பாக்ஸ் நல்லது அல்ல. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு மோசமான வேதிப் பொருட்களை வெளியிடும். எவர்சில்வரில் செய்யப்பட்ட டி ஃப ன் பாக்ஸ் நல்லது. தற்போது, ஹோட்பேக் வசதிகொண்ட டி ஃப ன்பாக்ஸ்களும் கிடைக்கின்றன. பல வண்ண உணவுகள் பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது விளையாட்...