Posts

Showing posts from April, 2017

வாழை இலையின் மகத்துவம்

Image
↑ வாழை இலையில் உணவைச் சாப்பிடுவது நமது கலாசாரம் மற்றுமின்றி ஆரோக்கியமானது, ருசியானது, ஆயுளை வளர்க்கும் நல்ல பழக்கமும் கூட. மேலும் தோலுக்குப் பளபளப்பைக் கொடுத்து, செரிமானக் குறைபாடு, பலவீனம், உடல்வலி, நாள்பட்ட சளி, ருசியின்மை ஆகியன நீங்கும் என சித்த மருத்துவம் சொல்கிறது. மேலும், அது வாழை இலையில் சாப்பிடும் முறையையும் சொல்கிறது. சாப்பிடும் முன் தரையில் லேசாக நீர் தெளித்து இலையின் நுனி, உண்பவரின் இடப்பக்கம் இருக்குமாறு விரிக்க வேண்டும், பின்பு, இலையில்  சிறிது நீர் தெளித்து கையால் துடைத்து, ஒரு சொட்டு நெய் இலையில் தடவி அதன் மேல் உணவு பதார்த்தங்களைப் பரிமாற வேண்டும். இலை நுனிப்பகுதில் இருந்து முதலில் உப்பு, ஊறுகாய், பச்சடி, பொறியல், கூட்டு, வடாகம், அப்பளம் போன்றவற்றை வரிசையாகவும், நடுப்பகுதியில் சதம், பருப்பு அதன் மேல் நெய் விட்டு தொன்னைகளில் தனித்தனியே குழம்பு, ரசம், பாயசம், மோர் வைக்க வேண்டும் எனவும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. உறவினர்களை மேற்கு திசை நோக்கி அமர்த்தியும், சாதுக்கள், ஞானிகளை வடக்கு நோக்கி அமர்த்தியும் உணவு பரிமாற வேண்டும். கெட்டுப் போன அல்லது வ...