வாழை இலையின் மகத்துவம்



வாழை இலையில் உணவைச் சாப்பிடுவது நமது கலாசாரம் மற்றுமின்றி ஆரோக்கியமானது, ருசியானது, ஆயுளை வளர்க்கும் நல்ல பழக்கமும் கூட. மேலும் தோலுக்குப் பளபளப்பைக் கொடுத்து, செரிமானக் குறைபாடு, பலவீனம், உடல்வலி, நாள்பட்ட சளி, ருசியின்மை ஆகியன நீங்கும் என சித்த மருத்துவம் சொல்கிறது.

மேலும், அது வாழை இலையில் சாப்பிடும் முறையையும் சொல்கிறது. சாப்பிடும் முன் தரையில் லேசாக நீர் தெளித்து இலையின் நுனி, உண்பவரின் இடப்பக்கம் இருக்குமாறு விரிக்க வேண்டும், பின்பு, இலையில்  சிறிது நீர் தெளித்து கையால் துடைத்து, ஒரு சொட்டு நெய் இலையில் தடவி அதன் மேல் உணவு பதார்த்தங்களைப் பரிமாற வேண்டும்.

இலை நுனிப்பகுதில் இருந்து முதலில் உப்பு, ஊறுகாய், பச்சடி, பொறியல், கூட்டு, வடாகம், அப்பளம் போன்றவற்றை வரிசையாகவும், நடுப்பகுதியில் சதம், பருப்பு அதன் மேல் நெய் விட்டு தொன்னைகளில் தனித்தனியே குழம்பு, ரசம், பாயசம், மோர் வைக்க வேண்டும் எனவும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

உறவினர்களை மேற்கு திசை நோக்கி அமர்த்தியும், சாதுக்கள், ஞானிகளை வடக்கு நோக்கி அமர்த்தியும் உணவு பரிமாற வேண்டும். கெட்டுப் போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால் இலையின் மேற்புறத்தில் ஒரு புதிய நிற நீர் உற்பத்தியாகி இலையில் ஒட்டாமல் வடிந்துவிடும்.

இதனை வைத்து உணவின் விஷத்தன்மையை அறியலாம். ஆகையால் தான் எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தழை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம் என முன்னோர்கள் கூறினார்கள்.

அல்சர் நோயினால் பாதிப்படைந்தவர்கள் தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்டால் இரைப்பை, முன் சிறுகுடலில் உள்ள புண்களைக் கரைத்து புதிய செல்களைத் தோற்றுவிக்கும் தன்மை வாழை இலைக்கு உண்டு.
ஆகையால் தான் தீக்காயம் ஏற்பட்டால், அந்த இடத்தில் வாழை இலையால் சுற்றுவது வழக்கம். உணவு சாப்பிட்ட பின் இலையை நம்மை நோக்கி மடிக்க வேண்டும். இதற்க்கு உணவு நன்றாக இருந்தது. நம் உறவு நீடிக்க வேண்டும் என்று அர்த்தம்.


சித்த மருத்துவம் சொன்ன நன்மைகளை பார்த்தோம். இனி நமது அறிவியல் சொல்லும் நன்மைகளை பார்ப்போம். நாம் சாப்பிடப் பயன்படுத்தும் வாழை இலையில் உடல் எடை கூடாமல் தடுக்கும் நார்ச்சத்து, உப்புகளை சரியாக வைத்திட கொட்டசியம், கால்சியம், மேக்னிசியம்,சோடியம், செம்புச் சத்துகள், கண்களைப் பாதுகாத்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ, சி, குடற்புண்களை ஆற்றும் பீனால், ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் வைட்டமின் கே, புற்றுநோய் காரணிகளை அழிக்கும் சாலிசிலிக் அமிலம் ஆகியவை உள்ளன. அதனால் வாழை இலையில் உண்பது ஆரோக்கியம் என்கிறது அறிவியல். அதனால் வாழை இலையில் சாப்பிட்டு ஆரோக்கியத்தைக் கூட்டுவோம்.

Comments

Popular posts from this blog

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?