ஆரோக்கியம் காக்கும் நிலக்கடலையின்(Peanut) மருத்துவ பலன்கள்.
நிலக்கடலை அல்லது வேர்க்கடலை அல்லது கச்சான் (peanut ) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா , இந்தியா , நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன. இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை , மணிலாக்கடலை , கடலைக்காய் , மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும். பலகாரம் செய்வதெல்லாம் கடலைஎண்ணெயில்தான் இருக்கும் தினசரி சமையலுக்கும் தாளிக்கவும் தான் தலைக்குவைத்துக்கொள்ள தேங்காய் எண்ணெய் , தலைதேய்த்துக்குளிக்க நல்லெண்ணெய் வேறு எண்ணெய்யைப்பற்றி கேள்விப்பட்ட்தில்லை . நிறைமாத கர்ப்பிணிகள் இருந்தால் ஆமணக்கு எண்ணெய் தயாராக இருக்கும் அதிலும் சிற்றாமணக்கு என்றால் கொஞ்சம் சிறப்பு . ...