Posts

Showing posts from June, 2019

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?

Image
எண்ணெய் குளியல் செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது. மேலும் எண்ணையை காய்ச்சி தலைக்கு செய்தது குளிப்பது நன்று. நீங்கள் விரும்பினால் எண்ணையை காய்ச்சும்போது அதில் சிறிதளவு பூண்டை தோலுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சளி பிடிப்பதை நாம் தவிக்க முடியும். நல்லெண்ணெயில் நீங்கள் குளிப்பதாக இருந்தால் சூரிய உதயத்திற்கு பின் குளிப்பது உத்தமம். நம் உடல் முழுவதும் நன்றாக நல்லெண்ணெய் தடவிய பின், நாம் சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை நிற்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு காரணம், சூரிய ஒளி நம் உடலில் படும்போது, சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்தை உடல் விரைவாக உருஞ்சும். மேலும் உடலுக்கு கால்சியம் சத்து மிகுதியாக கிடைக்கும். அதிகாலையில் நான்கு, ஐந்து மணி அளவில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, நாம் கண்டிப்பாக சுடுநீரில்தான் குளிக்க வேண்டும். நீங்கள் வழக்கமாக குளிர்ந்த நீரில் குளிக்கும் நபராக இருந்தாலும், அன்று ஒருநாள் நீங்கள் சுடுநீரில் தான் கட்டாயம் குளிக்க வேண்டும். குளிக்கும்போது சோப்பு, ஷாம்பு பய...

சுவையின்மை,பசியின்மை நீங்க ஆதொண்டை சாப்பிடுங்கள்

Image
ஆதொண்டை தனியிளைகளைக் கொண்ட முள்ளுள்ள ஏறு கொடி. செந்நிற பூக்களையும் சதைக் கனியையும் கொண்டது. காய்கள் சமைத்து உண்ணக் கூடியவை. தமிழகமெங்கும் வேலிகளில் தானாகவே வளர்கின்ற கொடியினம். இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை. நோய் நீக்கி உடல் தேற்றவும், பசி உண்டாக்கவும் நாடிநடையை மிகுத்து உடல் வெப்பம் தரவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இலையை நெய்யில் வதக்கி துவையலாக்கி உணவுடன் கொள்ள சுவையின்மை, பசியின்மை நீங்கி பசி உண்டாகும். 50 கிராம் வேர்ப்பட்டையை நன்கு இடித்து 1 லிட்டர் நீரில் விட்டு 100 மி.லி ஆகக் காய்ச்சி வடித்து மூன்று பங்காக காலை, மதியம், மாலை சாப்பிட்டு வரப் பசியின்மை, வாந்தி, மார்பு வலி தீரும். இலை சாற்றில் சம அளவு திப்பிலியை ஊற வைத்து, பிறகு காயவைத்து பொடி செய்து தினமும் 2 கிராம் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக பசி எடுக்கும். வேரை இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு, மண்டைக் குடைச்சல் போன்றவை தீரும். காயை வற்றலாக்கி அதை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள...