Posts

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?

Image
எண்ணெய் குளியல் செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது. மேலும் எண்ணையை காய்ச்சி தலைக்கு செய்தது குளிப்பது நன்று. நீங்கள் விரும்பினால் எண்ணையை காய்ச்சும்போது அதில் சிறிதளவு பூண்டை தோலுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சளி பிடிப்பதை நாம் தவிக்க முடியும். நல்லெண்ணெயில் நீங்கள் குளிப்பதாக இருந்தால் சூரிய உதயத்திற்கு பின் குளிப்பது உத்தமம். நம் உடல் முழுவதும் நன்றாக நல்லெண்ணெய் தடவிய பின், நாம் சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை நிற்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு காரணம், சூரிய ஒளி நம் உடலில் படும்போது, சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்தை உடல் விரைவாக உருஞ்சும். மேலும் உடலுக்கு கால்சியம் சத்து மிகுதியாக கிடைக்கும். அதிகாலையில் நான்கு, ஐந்து மணி அளவில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, நாம் கண்டிப்பாக சுடுநீரில்தான் குளிக்க வேண்டும். நீங்கள் வழக்கமாக குளிர்ந்த நீரில் குளிக்கும் நபராக இருந்தாலும், அன்று ஒருநாள் நீங்கள் சுடுநீரில் தான் கட்டாயம் குளிக்க வேண்டும். குளிக்கும்போது சோப்பு, ஷாம்பு பய...

சுவையின்மை,பசியின்மை நீங்க ஆதொண்டை சாப்பிடுங்கள்

Image
ஆதொண்டை தனியிளைகளைக் கொண்ட முள்ளுள்ள ஏறு கொடி. செந்நிற பூக்களையும் சதைக் கனியையும் கொண்டது. காய்கள் சமைத்து உண்ணக் கூடியவை. தமிழகமெங்கும் வேலிகளில் தானாகவே வளர்கின்ற கொடியினம். இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை. நோய் நீக்கி உடல் தேற்றவும், பசி உண்டாக்கவும் நாடிநடையை மிகுத்து உடல் வெப்பம் தரவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இலையை நெய்யில் வதக்கி துவையலாக்கி உணவுடன் கொள்ள சுவையின்மை, பசியின்மை நீங்கி பசி உண்டாகும். 50 கிராம் வேர்ப்பட்டையை நன்கு இடித்து 1 லிட்டர் நீரில் விட்டு 100 மி.லி ஆகக் காய்ச்சி வடித்து மூன்று பங்காக காலை, மதியம், மாலை சாப்பிட்டு வரப் பசியின்மை, வாந்தி, மார்பு வலி தீரும். இலை சாற்றில் சம அளவு திப்பிலியை ஊற வைத்து, பிறகு காயவைத்து பொடி செய்து தினமும் 2 கிராம் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக பசி எடுக்கும். வேரை இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு, மண்டைக் குடைச்சல் போன்றவை தீரும். காயை வற்றலாக்கி அதை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள...

நீண்ட வாழ்வுக்கு ஒரு உணவு அது நீராகாரம்

Image
இன்றைய எந்திர யுகத்தில் மனிதனுக்கு உதவி புரியும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கேற்ப, நோய்களும் நாளும் நாளும் அதிகரித்து கொண்டே வருகின்றன. புற்றீசல்போல் பெருகி வரும் நோய்களை கட்டுப்படுத்த விதவிதமான மருந்துகள் கண்டிபிடித்தபோதிலும் மனிதனின் ஆயுள் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் சென்று பார்த்தால் அன்று என்பது வயது அல்லது தொண்ணுறு வயது வரை மனிதனின் ஆயுட்காலம் இருந்தது. தொண்ணுறு வயது முதியவர் கூட இளமை துடிப்புடன் சுறுசுறுப்புடன் இயங்கினார். அனால் இன்றோ ஒருவர் அறுபத்தைந்து வயதை நெருங்கி விட்டாலே, ஏன் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய அவல நிலை இன்று உள்ளது. எங்கும், எளிதில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் கைக்கு வந்துவிட்டபோதிலும், எந்த ஒரு நோய்களையும் தீர்க்கும் வகையில் மருத்துவ உலகம் வளர்ந்த போதிலும் மனிதனின் ஆயுட்காலம் ஏன் குறைந்து வருகிறது? தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள் மட்டுமே மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயித்து விட முடியாது. அந்த காலத்தில் இதுபோன்ற மருத்துவ வசதிகளும், தொழில்நுட்பமுமா இருந்தது? ஆனால் அ...

அரிசி கஞ்சியில் உடல் நலத்தை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள்

Image
சாதம் வடித்த கஞ்சியை வேண்டாதாஹ் பொருளாக நினைத்து கொட்டுடது தான் நிறைய பேரின் வழக்கம். அதில் உடல் நலத்தை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பது பலருக்கும் தெரிவதில்லை. அந்த கஞ்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்வோம். அரிசி கஞ்சியை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மின்னும். குளித்து முடித்தவுடன் கஞ்சியை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். தலையை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் இது உதவும். ஒரு டம்ளர் அரிசி கஞ்சியில் சிறிது மோர் கலந்து சாப்பிட்டு வருவது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். அரிசி கஞ்சியுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரண சக்தி பெருகும். கால்வலியால் அவதிப்படுபவர்கள் அரிசி கஞ்சியுடன் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி வைக்கலாம். கால் வீக்கத்தை குறைக்கும் வலி நிவாரணி இது. துணிகளுக்கு கஞ்சி போடவும் பயன்படுத்தலாம். துணிகளை துவைத்ததும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு டம்ளர் கஞ்சியை கலந்து துணிகளை முக்கி எடுத்தால் பளபளப்பாக மின்னும். அதனை ‘அயர்ன்’ செய்தால் அழகாக காட்...

கோழி முட்டையில் என்னென்ன இருக்கிறது தெரியுமா?

Image
கோழி முட்டையில் என்னென்ன இருக்கிறது தெரியுமா? 100 கிராம் கோழி முட்டையில் தன்ணீர் 75 கிராம். கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின் ஏ, வைட்டமின் டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட ஏழு வகை தாதுச்சத்துகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் எனப் பல சத்துகள் உள்ளன. ஒரு முட்டை சாப்பிட்டால் 155 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. ஒரு நேரத்தில் இரண்டு முட்டை சாப்பிட்டால் ஒரு சராசரி மனிதருக்குக் காலை உணவுக்குத் தேவையான சக்தி கிடைத்துவிடும். இன்றைய தினம் துரித உணவகங்களில் பல வகை வண்ணச் சுவையூட்டிகளையும் மசாலாக்களையும், எண்ணெய்களையும் கலந்து பலதரப்பட்ட முட்டை உணவுகளைத் தயாரிக்கிறார்கள். முட்டையால் கிடைக்கிற கொலஸ்ட்ரால் ஆபத்தை விட, இந்தக் கலப்புப் பொருள்களால் குடல் புற்று நோய் உள்ளிட்ட ஆபத்துகள் வருவத்தான் பெரும் கவலைக்குரிய விஷயம். ‘முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிகச் சத்து கிடைக்கும்’ என்று பொதுமக்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது, குறிப்பாக, குழந்தைகள், இளம்பெண்கள், தடகள வீரர்கள், உடலுக்கு...

உணவு சாப்பிடும்போது பேசாதீர்கள்!

Image
சாப்பிடும்போது பேசக்கூடாது. உணவை ரசித்து சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த பெரியோர்கள் சொல்லுக்கு விஞ்ஞ‍ான பூர்வமாகவும் விளக்கம் கிடைத்திருக்கிறது. அதற்க்கு மனித முகத்தின் வடிவமும் ஒரு காரணம் என்கிறது. மனித முகத்தில் மண்டை ஓட்டின் அமைப்பு கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது மருத்துவம். இத்தத் தொண்டையை மேலும் 3 பகுதிகளாக பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதன்படி இணைந்த தொண்டை, குரல் வளையோடு இணைந்த உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல குழாயை கடந்து நுரையீ ரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராஸிங் போல செயல்படுகிறது. சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக்கொண்டால் உணவுப் பாதைதான் ரெயில்வே பாதை. சாலை எப்போதும் திறந்தே இருக்கும். அதேபோல்தான் சுவாசப்பாதை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க்கொண்டிருக்கும். உணவுப் பாதை ரெயில்வே பாதை போல எப்போதாவதுதான் அதில் ரெயில் வரும். ஆனால் ரெயில் வரும்போது சாலை மூடப்படும். அப்படித்தான் உணவு வரும்போது, அதாவது நாம் சாப்பிடும் போது சுவாசப்பா...

பக்கவாதத்தைத் தடுக்கும் முட்டைக்கோஸ்

Image
முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டால் பக்கவாதத்தைத் தவிர்க்கலாம் என்ற ஒரு புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் சுமார் 70 வயதான 954 பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு அறிந்தனர். ஆய்வின் முடிவில் அவர்கள் தெரிவித்த தகவல்: வயதில் மூத்த பெண்கள் முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றை சாப்பிட்டு வருவதால் பக்கவாத நோய் அபாயத்தில் இருந்து விடுபடுகிறார்கள். தினமும் மூன்று வேலை உணவில் காய்கறிகளைச் சேர்ந்து சாப்பிட்டு வருவதால் ரத்த நாளங்கள் வலுவடைகின்றன. மேலும், முட்டைக்கோஸ் வகைகளை சாப்பிடுவதால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடுகின்றன. அமெரிக்காவில் உள்ள, இதயத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் வெளிவரும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் லாரன் பிளாகன் ஹார்ஸ்ட் கூறுகையில், இந்த ஆய்வின் மூலம், இதயத்துக்க்குச் செல்லும் ரத்த நாளங்கள் வலுவடைய சத்தான காய்கறிகள் சாப்பிடுவது அவசியம் எனத் தெ...