பக்கவாதத்தைத் தடுக்கும் முட்டைக்கோஸ்


முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டால் பக்கவாதத்தைத் தவிர்க்கலாம் என்ற ஒரு புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் சுமார் 70 வயதான 954 பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு அறிந்தனர்.

ஆய்வின் முடிவில் அவர்கள் தெரிவித்த தகவல்:

வயதில் மூத்த பெண்கள் முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றை சாப்பிட்டு வருவதால் பக்கவாத நோய் அபாயத்தில் இருந்து விடுபடுகிறார்கள். தினமும் மூன்று வேலை உணவில் காய்கறிகளைச் சேர்ந்து சாப்பிட்டு வருவதால் ரத்த நாளங்கள் வலுவடைகின்றன. மேலும், முட்டைக்கோஸ் வகைகளை சாப்பிடுவதால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடுகின்றன.

அமெரிக்காவில் உள்ள, இதயத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் வெளிவரும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் லாரன் பிளாகன் ஹார்ஸ்ட் கூறுகையில், இந்த ஆய்வின் மூலம், இதயத்துக்க்குச் செல்லும் ரத்த நாளங்கள் வலுவடைய சத்தான காய்கறிகள் சாப்பிடுவது அவசியம் எனத் தெரியவந்தது. இப்பழக்கத்தால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் கணிசமாகக் குறைகிறது என்றார். 




இதயம் காக்கும் கனி

‘கிவி’ என்பது நாம் அதிகம் உட்கொள்ளாத கனி, இதன் விளையும் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் உடல்நலத்துக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியது. கிவி.

உதாரணமாக, இப்பழம் இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகிறது. உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், அது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மாரடைப்புக்கு முன் பலவகையான நோயியல் நிகழ்வுகள் இதயத் தமனிகளில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், தட்ட்கங்கள் ஆகியவை ஒன்றாகக் குழுமி, கட்டியான அடைப்பாக மாறி, இதயத் தமனிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்புக்கு வழிவகுக்கின்றன.

இவ்வாறு இதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்துக்கு இயற்கையாகவே உள்ளது. இது வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும், இப்பழத்தில் ‘போலேட்’ என்ற சத்தும் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட மிக அதிக அளவில் உள்ளன.

கிவி பழத்தில் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்துகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், இப்பழத்தை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

இப்பழத்தில் உள்ள வைட்டமின் இ, பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்கத் துனைபுரிவதுடன், பெண்கள் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகிறது.

Comments

Popular posts from this blog

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?