மகத்தான பாரம்பரியப் மருதாணியின் பயன்கள்


மருதாணி வைத்துக்கொள்வது நம் பாரம்பரியப் பழக்கம். இன்று செயற்கை மருதாணி வந்துவிட்டாலும், இன்னுமும் கிராமங்களில் மருதாணிக்கே தனி மவுசு, மருதானியின் இலை, பூ, பட்டை அனித்தும் பலன்கள் தரக்கூடியவை. ‘அழவனம்’, ‘ஐவனம்’, ‘சரணம்’ என வெவ்வேறு பெயர்கள் இதற்கு உண்டு.
  • எலுமிச்சைக் சாறு அல்லது புளித்த காடி நீர்விட்டு, மருதாணி அரைத்துப் பூசினால், மூட்டுவலி, கை கால் வலி, குடைச்சல், உடல் எரிச்சல் சரியாகும்.
  • உள்ளங்கையில் எரிச்சல் ஏற்பட்டால், இரவு படுக்கும்போது மருதாணி இலையை எடுத்து அரைத்து, தேய்த்துவிட்டுப் படுத்தால், காலையில் எரிச்சல் நீங்கிவிடும்.
  • நகப்புண், சுளுக்கு, மற்ற புண்களின் மீது இதன் இலையைக் கசக்கிவைத்துக் கட்டுப்போட்டால், புண்கள் குணமாகும்.
  • மருதாணி இலைச்சாறு அரைக் கரண்டி எடுத்து, 90 மி.லி பாலில் கலந்து குடித்தால், கை, கால், உடல்வலி நீங்கும். அதே அளவு சாற்றைப் பாலுக்குப் பதிலாகத் தண்ணீரில், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கலந்து குடித்தால், தாதுஉற்பத்தி பெருகும்.
  • ஆறு கிராம் மருதாணி இலையை எடுத்து, ஒரு பூண்டு, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, காலை தோறும் ஐந்து நாட்கள் உப்பு இல்லா பத்தியத்துடன் சாப்பிட்டுவர, மேகத்தலும்புகள் நீங்கும்.
  •  மருதாணி இலையை அரைத்து, கண்ணை மூடி, கண்களுக்கு மேல் துணிவைத்துக் கட்ட, மூன்று நாட்களில் கண் எரிச்சல், சூடு நீங்கிக் குளிர்ச்சி அடையும்.
  • கடைகளில் நகச்சாயங்கள் வாங்கிப் பயன்படுத்துவதால், வேதிப் பொருட்களால் நகம் பாதிக்கப்படக்கூடும். மருதாணி இலையை அரைத்து, நகங்கள் மீது பூசி, காயவைத்து அகற்றினால், நகத்துக்கு அழகான நிறம் கிடைப்பதோடு நகத்தில் இருக்கும் அழுக்குகள், பூஞ்சைத் தொற்றுகள் அகன்றுவிடும்.
  • கூந்தல் வளர்வதற்கான சித்த மருத்துவத் தைலங்களில் மருதாணி இலைச்சாறு பயன்படுத்தப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?