நாம் நல்ல பழக்கவழக்கங்களை உருவாக்குவோம்


நல்ல பழக்கவழக்கங்கள் நம்மை உருவாக்கும் என்கிறார் பிரபல ஆங்கில கவிஞர் ஜான் டிரெயின் இதைச் செய்யலாமா அதைச் செய்யலாமா என நமக்கு ஒரு நாளில் பல வாய்ப்புகள் இருக்கின்றன அதில் எதைத் தேடுகிறோமோ அதை பொறுத்துதான் அந்த நாள் அமையும் நாம் எதைச் சிந்திக்கிறோமோ அதுவே செயலாகிறது நாம் எதைச் செய்கிறோமோ அது பழக்கமாகிறது நாம் எதை வழக்கமாக வைத்து வைக்கிறோமோ அது நம் குணாதிசயம் ஆகிறது எனவே நம்மை வடிவமைப்பதில் நம் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும் தான் நல்ல பழக்கவழக்கங்கள் இலவசமாக அவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் செயலும் முக்கியம்.

ஒரு நாளை எவ்வாறு செலவிடுகிறோம் என பட்டியலிட்டுப் பாருங்கள். குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கிய பலன்கள் என்னென்ன வளரும் பருவத்தில் கற்றுக்கொண்டது என்னென்ன... நண்பர் மற்றும் உறவினரிடம் இருந்து கற்றுக்கொண்டவை என்னென்ன? சிந்தித்துப்பாருங்கள்.

தூங்கச் செல்லும் முன் பல் தேய்ப்பது, வெயிலில் செல்லும் போது சொல் செல்லும்போது செருப்பு, ஸ்லீப்பரைத் துடைப்பது இப்படியான நல்ல பழக்கங்கள் முதல், புகை பிடித்தால் தான் இந்த நட்பு வட்டாரத்தில் நம்மை மதிப்பார்கள், மது அருந்துவது, பார்ட்டிக்குப் போவது தான் நாகரீகம் என்பன போன்ற கெட்ட பழக்கங்கள் வரை எத்தனை விஷயங்களை நாம் மறுபரிசீலனை என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். சிலர், 'வீட்டில் குழந்தைகள் அதிகமாக டிவி பார்க்கின்றனர்' எனப் புகார் செய்வார்கள். உண்மையில், பெற்றோர் பார்ப்பதால்தான் குழந்தைகளுக்கும் டி.வி பார்க்கும் பழக்கம் வந்திருக்கும்.. நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்வதும், தீய பழக்கங்களை கைவிடுவதும் நமது முயற்சியில்தான் உள்ளன. அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள் என்னென்ன... கவனமில்லாமல், விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் தவறுகள், பழகிவிட்ட பழக்கங்களால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன... அவற்றை திருத்திக் கொள்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

நகங்களை கடிப்பது

1. சிலர்'எதையாவது யோசிக்கும்போது, டென்ஷனாக இருக்கும்போது, நகங்களை கடிக்கிறேன்' என்று சொல்வார்கள். கிருமிகள் வாழ ஏற்ற இடங்களில் நகங்களும் ஒன்று. அதிலுள்ள கிருமிகள் வாய் வழியே வயிற்றுக்குள் செல்லும். கல்லீரல் பாதிப்பு, வயிற்றில் தொற்று ஏற்படலாம்.

2. நகங்களின் அமைப்பில் மாற்றம் ஏற்படும். நகங்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். நகங்களைச் சுற்றி உள்ள இடங்களும் பாதிப்புக்குள்ளாகும் நகங்களின் நிறத்தில் மாறுதல் ஏற்படும்.

3. நகம் கடிப்பவர்கள், இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடும்வரை, தரமான நெய்ல் பாலீஷ் பூசலாம். (மற்றவர்கள் நெயில் பாலிஷ் போடுவதை தவிர்க்க வேண்டும்)

கால் மேல் கால் போட்டு அமர்வது

4. கால் மேல் கால் போட்டு அமரும்போது, தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகமாகும், சில ஆய்வுகள் 'இதயம் தொடர்பான பிரச்சனைகள், இனப்பெருக்க மண்டலம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்' என்று தெரிவிக்கின்றன. எனவே, கால் மேல் கால் போட்டு அமர்வதை தவிர்க்க வேண்டும்.

5. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் சூழலில் இருப்பவர்களுக்கு, உடல் பருமன் பிரச்சனை பருமன் பிரச்சனை, சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம். இதனுடன், கால் மேல் கால் போட்டு அமர்ந்தபோது, ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கலாம். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை இரண்டு நிமிடங்கள் எழுந்து நடக்கலாம்.

நெட்டி முறிப்பது

6. டென்ஷனாக இருக்கும்போது பதற்றத்தில் கைவிரல்களை மடக்கி, நெட்டி முறிப்பது பலரின் வழக்கம். கைவிரல்களின் இணைப்புகளில் திரவம் இருக்கும். நெட்டி முறிப்பதுபோது, விரல் மூட்டு மற்றும் திரவம் பாதிக்கப்படும். தொடர்ந்து செய்து வரும்போது, மூட்டு பிரச்சனைகள் கூட வரலாம். டென்ஷனான தருணங்களில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.

7. இரவில், விளக்குகளை அணைத்துவிட்டு செல்போன் பயன்படுத்தும்போது, அதிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகள் கண்களைப் பாதிக்கலாம். மேலும், இது தூக்கத்தையும் கெடுக்கும்.

தூக்கம் பாதிக்கப்படுவதால், தூங்கும் நேரமும் பாதிக்கப்படும். மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பது, தூக்கத்தில் தான், சரியாகத் தூங்காமல் இருந்தால், இந்த ஹார்மோன் சுரக்காமல் போகலாம். இந்த ஹார்மோன் சுரப்பு பிரச்சனை தினமும் இருந்தால், மார்பகம், ப்ராஸ்டேட், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய்கள் வரலாம்.

8. காலையில் எழ அலாரம் செட் செய்த பிறகு, மீண்டும் செல்போனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

9. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?