அளவில் சிறியதாக இருக்கும் கொசு தரும் கொடிய நோய்கள்


உலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருக்கும் இவை உயிருக்கே உலை வைக்கும் தன்மை கொண்டவை. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கொசு கடியால் நோய் வாய்ப்பாட்டு உயிரிழக்கிறார்கள். மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு, மூளை அழற்சி, சிக்கன்குனியா, ஜிகா வைரஸ் போன்ற பல்வேறு நோய் பாதிப்புகளை கொசுக்கள் ஏற்படுத்துகின்றன.

மலேரியா:

இது ஒருவகை ஒட்டுண்ணி நோயாகும், இது அனோபிலீஸ் என்ற கொசு மூலம் பரவுகிறது. இந்த கொசுக்கள் வெப்ப மண்டல பிரதேசங்களில் உயிர்வாழும் தன்மை கொண்டவை. மலேரியா நோய் பாதிப்புக்கு காய்ச்சல்தான் தொடக்க அறிகுறியாக இருக்கும். சாதாரண உடல்நல பாதிப்பாகத்தான் ஆரம்பத்தில் தெரியும். பின்னர் தலைவலி, தசை வலி, குறைந்த ரத்த அழுத்தம், சுய நினைவை இழக்கும் நிலைக்கு ஆளாகுதல், கடும் குளிர் போன்ற அறிகுறிகள் தென்பட தொடங்கும். மெல்ல மெல்ல நோயின் தாக்கம் அதிகமாகி கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஸ்போரோ சோயிட்டுகள் எனும் ஒட்டுண்ணிகள் ரத்த ஓட்டத்தில் ஊடுருவி சிவப்பு அணுக்களுக்கு பாதிப்பை உண்டாக்கிவிடும்.


டெங்கு:

ஏடீஸ் வகை கொசுக்கள் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன். இது தொற்றுநோய் வகையை சார்ந்தது. இந்த நோய் பாதிப்புக்கு ஆளானவரின் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள், மற்ற நபர்களை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு நோய் பாதிப்பு உண்டாக்கிவிடும். நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு மூட்டு மற்றும் தசை பகுதியில் கடும் வலி உண்டாகும். இது எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. வெப்ப மண்டல பகுதியில்தான் இந்த நோய் அதிகமாக பரவும். கொசு கடித்தாலும் 4 முதல் 7 நாட்களுக்கு பிறகுதான் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். கடுமையான தலைவலி, கண் வலி, குமட்டல், வாந்தி, மூட்டுவலி, மார்பு, முகம், கை, கால் போன்ற பகுதிகளில் வீக்கம், கடுமையான காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆரம்பத்தில் நோய் தாக்கம் லேசாக இருக்கும். பின் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

Comments

Popular posts from this blog

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?