இருமல்,இரைப்பை நோய்களை நீக்கும் இஞ்சி மருத்துவ பயன்கள்
இஞ்சி: மணமுள்ள கிழங்குகளையுடைய சிறு செடி, எல்லாக் காய்கறிக் கடைகளிலும் கிடைக்கும். தமிழகமெங்கும் பரவலாகப் பயிரிப்படுகிறது. கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. உலர்த்திப் பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் சுக்கு எனப்படும். மருந்துக் கடைகளில் கிடைக்கும். வியர்வை உமிழ்நீர்ப் பெருக்கியாகவும், பசித் தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயற்படும். இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச் சாறு வகைக்கு 30 மி.லி யுடன் தேன் 15 மி.லி கலந்து 15 மி.லி அளவாக அடிக்கடி கொடுத்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் தீரும். வெங்காயச் சாறுக்குப் பதிலாக எலுமிச்சைக் சாற்றையும் பயன்படுத்தலாம். இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு வகைக்கு 15 மி.லி தேன் கலந்து 15 மி.லி அளவில் 3 வேலையாகச் சாப்பிட்டு வர இருமல், இரைப்புத் தீரும். 200 கிராம் இஞ்சி தோல் நீக்கிச் துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் ( 45 நாள்கள்) சாப்பிட உடல் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சுவலியும் மனத்திடமும் பெற்று ம...