உடலுக்குச் சக்தியும், செயலாற்றலும், பாதுகாப்பும் அளிக்கும் சத்துக்களின் அடிப்படை பயன் என்ன?
உடலுக்குச் சக்தியும், செயலாற்றலும், பாதுகாப்பும் அளிக்கும் சத்துக்களின் பயன்பற்றி தனித்தனியாக அவற்றின் அடிப்படை குறித்தும் எந்தெந்த உணவு வகையில் என்னென்ன சத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது பற்றியும் சற்று விளக்கமாகக் காண்போம். முதலில் மாச்சத்து குறித்து ஆய்வோம். கரி, நீர், வாயு, பிராணவாயு எனப்பட்ட மூலகங்கள் ஒன்றிணைந்த ரசாயனப் பொருள்தான் மாச்சத்து ஆகும். இதனைக் கார்போஹைட்ரேட்டுகள் என்று குறிப்பிடுவதுண்டு. ‘கார்போ’ எனப்படும் கரியும் ‘ஹைட்ரேட்’ எனப்படும் நீரும் சேர்ந்தது என்ற அர்த்தத்தில்தான் கார்போஹைட்ரேட் என்று கூறுகிறார்கள். மாச்சதிலிருந்துதான் உடலுக்குத் தேவையான சக்தியை நாம் பெற வேண்டியுள்ளது. இறைச்சி உணவில் இந்த மாச்சத்து அனேகமாக இல்லையென்று கூறவேண்டும். மிகவும் குறைவான அளவு பிராணிகளின் கல்லீரலில் மட்டுமே உள்ளது. மற்றும் மீன் முட்டை போன்ற எதிலுமே மாச்சத்து இல்லை. அசைவ உணவுக்காரர்கள் மாச்சத்தைப் பெற வேண்டுமானால் கிழங்கு வகைகள், தானியங்கள் போன்ற மரக்கறி உணவிடம்தான் சரணடைய வேண்டுயுள்ளது. மாச்சத்து பொதிந்துள்ள உணவுப் பண்டங்களை வகைப்படுத்துவோம். அட...