உடலுக்குச் சக்தியும், செயலாற்றலும், பாதுகாப்பும் அளிக்கும் சத்துக்களின் அடிப்படை பயன் என்ன?
உடலுக்குச் சக்தியும், செயலாற்றலும்,
பாதுகாப்பும் அளிக்கும் சத்துக்களின் பயன்பற்றி தனித்தனியாக அவற்றின் அடிப்படை
குறித்தும் எந்தெந்த உணவு வகையில் என்னென்ன சத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன
என்பது பற்றியும் சற்று விளக்கமாகக் காண்போம்.
முதலில் மாச்சத்து குறித்து ஆய்வோம்.
கரி, நீர், வாயு, பிராணவாயு எனப்பட்ட மூலகங்கள்
ஒன்றிணைந்த ரசாயனப் பொருள்தான் மாச்சத்து ஆகும்.
இதனைக் கார்போஹைட்ரேட்டுகள் என்று
குறிப்பிடுவதுண்டு.
‘கார்போ’ எனப்படும் கரியும் ‘ஹைட்ரேட்’
எனப்படும் நீரும் சேர்ந்தது என்ற அர்த்தத்தில்தான் கார்போஹைட்ரேட் என்று
கூறுகிறார்கள்.
மாச்சதிலிருந்துதான் உடலுக்குத் தேவையான சக்தியை
நாம் பெற வேண்டியுள்ளது.
இறைச்சி உணவில் இந்த மாச்சத்து அனேகமாக
இல்லையென்று கூறவேண்டும். மிகவும் குறைவான அளவு பிராணிகளின் கல்லீரலில் மட்டுமே
உள்ளது.
மற்றும் மீன் முட்டை போன்ற எதிலுமே மாச்சத்து
இல்லை. அசைவ உணவுக்காரர்கள் மாச்சத்தைப் பெற வேண்டுமானால் கிழங்கு வகைகள்,
தானியங்கள் போன்ற மரக்கறி உணவிடம்தான் சரணடைய வேண்டுயுள்ளது.
மாச்சத்து பொதிந்துள்ள உணவுப் பண்டங்களை
வகைப்படுத்துவோம். அடைப்புக் குறிக்குள் உள்ள எண் அந்தந்த உணவுப் பண்டத்தில்
மாச்சத்து அமைந்துள்ள சதவிகித அளவாகும்.
மாச்சத்து அடங்கியுள்ள உணவுப் பண்டங்கள் வருமாறு:
அரிசி(78), கேழ்வரகு(16.3), கோதுமை(71.2), கம்பு(67.1), சோளம்(66.2), கடலை(61.2), பருப்பு(57), பட்டாணி(56.6), மரவள்ளிக் கிழங்கு(38.7), சர்க்கரை வள்ளிக்கிழங்கு(31), முந்திரிப்பருப்பு(22.3), வேர்க்கடலை(20.3), உருளைக்கிழங்கு(19).
அரிசி அல்லது கோதுமையைத் தொடர்ந்து
பயன்படுத்துவதன் மூலம் தேவையான அளவு மாச்சத்தினைத் தாரளமாகப் பெறலாம்.
இனி கொழுப்புச் சத்துக் குறித்துக் கவனம்
செலுத்தலாம்.
நாம் உண்ணவும் உணவு தேவைக்கு அதிகமாக
இருக்கும்போது, அது வருங்கால உபயோகத்துக்கென கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது.
நாம் இரண்டொரு நாள் உணவேதும் இன்றிப் பட்டினி கிடக்க நேரிட்டால் இந்தக்
கொழுப்புதான் இப்பொழுது உடலுக்கான சத்தாக மாறி உதவுகிறது.
கொழுப்பின் முக்கிய பொறுப்பு சேமிப்பாக
இருப்பதால், கொழுப்பு கலந்த உணவுப் பண்டகங்களை அதிகமாக விரும்பி உண்போரின் உடல்
தேவைக்கு மீறிப் பருத்துவிடுகிறது.
எண்ணெய், எண்ணெய் விதைகள், கோட்டைகள், பால்,
வெண்ணெய், நெய், இறைச்சிக் கொழுப்பு ஆகியவற்றிலிருந்து கொழுப்புச் சத்து
கிடைக்கிறது.
சக்தியை ஊட்டும் உணவுப் பண்டம் எதிலும் ஒரு
குறிப்பிட்ட அளவு கொழுப்பு கலந்தே இருக்கிறது.
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எந்த அளவு
கொழுப்புச் சத்து தேவை என்பது குறித்து மருத்துவ அறிஞர்கள் இன்னும் ஒரு திடமான
முடிவுக்கு வரவில்லை. எனினும் நமது அன்றாட உணவில் ஒரு நூறு கிராம் அளவுக்குக்
கொழுப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நமது உடலில் கொழுப்புச் சத்து குறைவதைவிட
அதிகமாகும் போதுதான் உடல் பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக நேரிடுகிறது. கொழுப்புச்
சத்து அளவுக்கு அதிகமாகச் சேர்ந்தால் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய் போன்றவை
ஏற்படக் கூடும்.
ஆகவே கொழுப்பு விஷியத்தில் மிகுந்த எச்சரிக்கை
வேண்டும்.
புரதம் எனப்படும் சத்தானது மனித உடலின்
செம்மைக்கும், சீரான செயற்பாட்டுக்கும் மிகவும் அவரியமான ஒன்றாக இருக்கிறது.
உடலுக்குப் பொருட்களை உருமாற்றுச் சக்தியாக
மாற்றும் மிகவும் முக்கியமான பணியைப் புரதம் மேற்கொண்டுள்ளது.
உடல் உறுப்புகளின் இயக்கத்துக்கு அடிப்படையாக
இரத்ததில் கலந்துள்ள ஹோர்மோன்கள் எனப்படுவை புரதங்களேயாகும்.
நமது உடலின் தசைகளுக்குத் தேவைப்படுகின்ற பிராண
வாயுவைத் தாங்கிச் செல்லுகின்ற இரத்த சிவப்பு அணுக்களில் இருக்கும் ஹீமோக்ளோபின்
உடலில் நீரை எல்லா உறுப்புகளுக்கும் பரப்பும் பணிக்கு உதவும் இரத்த பிளாஸ்மா,
பரம்பரை இயல்புகளை உடலில் உருவாக்கும் குரோமோசோம் போன்றவையெல்லாம் புரதங்களே என்றால்
இதன் முக்கியத்துவம் விளங்கும்.
புரதங்கள் மிகவும் சிக்கல் வாய்ந்த
பொருள்களாகும். அமினோ அமிலங்கள் எனப்படும் விந்தைப் பொருட்களால் ஆன புரதங்களின்
அணுக்கள் மிகவும் பெரியவையாகத் திகழ்கின்றன.
புரதமில்லாத உயிர் வாழ்க்கையை கிடையாது என்றே
கூற வேண்டும்.
குழந்தைப் பருவத்தின் சீரான வளர்ச்சிக்கும்,
சரியான முதிர்ச்சிக்கும், உடற் தசைகளின் செயற்பாட்டுக்கும் உடலில் கெட்டழியும்
பகுதியைச் சீராக்கி ஈடுசெய்வதற்கும் புண், காயம் போன்றவை துரிதமாக ஆறுவதற்கும்,
இரத்தம் விருத்தியடைவதற்கும், நோய்த் தடுப்பு ஆற்றலை உடலுக்கு ஊட்டவும், புரத்தின்
செயற்பாடுதான் அடித்தளமாக அமைந்து உதவுகிறது.
உடலின் உறுப்புகள் அனைத்தும் தத்தம் இடத்திலிருந்து
செயற்பட உதவுவது புரதமே. சுரப்பிகள் சரியாக இயங்கித் தத்தம் சாற்றினைச் சுரக்கச்
செய்வது புரதமே. நமது உணவின் புரதச் சத்து குறைந்துவிடக் கூடுமானால் இரத்ததின்
திடத்தன்மை பலவீனமடைந்து நீர்த்துப் போகும். தசைகள் சுக்கமடைந்து விடும்.
குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பது
கண்டால் அந்தக் குழந்தையின் உணவில் புரதச் சத்து போதிய அளவில் இல்லை என்று திடமாக
திட்டமாக யூகித்துக் கொள்ளலாம்.
ஈரல் தொடர்பான பிணிகள் கைகால்களில் வீக்கம் –
சோகை போன்ற பயணிகளுக்குப் புரதச் சத்துக் குறைவே காரணமாகும்.
தாவரப் புரதம், மாமிசப் புரதம் எனப் புரதங்களை
இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். புரதப் பொருள்களுக்கான முடிவான மூலாதாரம்
தாவரங்கள்தான். பூமியில் இருக்கும் பல வகையான நுண்கிருமிகளின் செயற்பாட்டினால்
தவரங்களுக்குத் தேவையான நைட்ரேட் உப்புகள் கிடைக்கின்றன.
இந்த உப்புகள் நீரில் கரைந்து வேர்களின் மூலம்
தாவரத்தின் உறுப்புகளுக்குச் செல்லுகின்றன. பின்னர் பலவிதமான ரசாயன
மாறுபாடுகளுக்குப் பிறகு தாவரங்கள் புரதங்களைத் தயாரிக்கின்றன.
இவ்வாறு தயாரிக்கப்படும் புரதங்கள் அநேகமாகத்
தாவரங்களின் விதைகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு தாவர விதைகளில் சேமித்து வைக்கப்படும்
புரதங்களின் அளவு பற்றிய விவரங்கள் கீழே தரப்படுகின்றன. அடங்கியுள்ள புரதங்களின்
சதவிகித அளவு அடைப்புக் குறிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வேர்க்கடலை(26.7), பருப்பு(22.3), சோயாபீன்ஸ்(43), முந்திரிப்பருப்பு(21.2), கடலை(17.1), கோதுமை(11.5), அரிசி(8.5), கேழ்வரகு(7), கொத்தமல்லி(3.3), கத்திரிக்காய்(1.3), தக்காளி(1.9), பீட்ரூட்(1.7), ஆப்பிள்(0.3), கீரை(0.9), மாம்பழம்(0.6)
மனிதனுடைய அன்றாட உணவில் வேறு என்ன
கலந்தில்லாவிடினும் அல்லது குறைவாக கலந்திருப்பினும் பரவாயில்லை. ஒரு நாள் இல்லாத
சத்துப் பொருளை மறுநாள் சேர்த்து உண்டு சமாளிக்கலாம். அனால் அன்றாட உணவில் புரதப்
பொருள் கலந்து இருந்தே ஆகவேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான புரதச் சத்து
அவனுடைய உடல் எடையைப் பொறுத்து அமையும்.
நாம் உண்ணும் உணவு ஜீரணமாகும் போது புரதம்
சிதைவுபட்டு அமினோ அமிலங்களாக மாற்றப்பட்டு பின்னர் சத்தாக மாறிவிடுகின்றன.
நமது ஆரோக்கியத்துக்கு வைட்டமின்கள் எனப்படும்
உயிர்ச்சத்துகள் மிகவும் முக்க்யவத்துவம் வாய்ந்தவையாகக் திகழ்கின்றன.
உயிர்ச் சத்துக்கள் குறைவாக இருப்பதுதான் நோய்க்கான
மூலாதாரமாக அமைந்துள்ளது. உயிர்ச் சத்து நமது உடலில் குறைவுப்படும் போது உடலின்
குறிப்பாக எலும்புகளின் வளர்ச்சி முக்கியமாகத் தடைப்படுகின்றது.
வளரும் தண்டுகள், பச்சை இலைகள், முட்டைக் கொசு,
சிவப்பு முள்ளங்கி ஆகியவற்றின் மூலம் உயிர்ச் சத்து ‘கே’யைப் பெறமுடியம்.
உயிர்ச் சத்துக்களில் இன்னும் பல வகைகள்
கண்டுபிடிக்கப்பட்டிருப்பினும் அவை முழுவதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய
ஆவசியமில்லை.
இதுவரை குறிப்பிட்ட உயிர்ச் சத்துக்களை உடலில்
குறைவுபடமால் காப்பதன் மூலமே நோயனுகாத ஆரோக்கிய வாழ்வு வாழமுடியும்.
Comments
Post a Comment