Posts

Showing posts from 2015

உலர் திராட்சை குறித்த உண்மை தகவல்

Image
நாம் அதிகம் அறியாத உணவுப்பொருட்களிலும்கூட பல ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான், ‘கிஸ்மிஸ்’ எனப்படும் உலர் திராட்சை. உலர் திராட்சை குறித்த சில உண்மைகளை இங்கு பார்ப்போம்... சாதாரண திராட்சைப் பழத்தைவிட உலர் திராட்சையில் வைட்டமின் அதிகம் உள்ளன. அமினோ அமிலங்கள்,பொட்டாசியம்,சுக்ரோஸ்,மெக்னீசியம்,கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். மஞ்சள்காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இருவேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின் காலையிலும்,மாலையிலும் 25 உலர் திராட்சைப் பழங்களை சாப்பிட்டுவந்தால் மூலநோய் பாதிப்பில் இருந்து மீளலாம். மலச்சிக்கலால் தவிப்பவர்கள், உலர் திராட்சையை இரவு உறங்கும்முன் ஒரு கைபிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் தெரியும். இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு, காலையில் கண்விழித்ததும் உலர் திராட்சையை நசுக்கி, அதன் சாற்...

இருமல்,இரைப்பை நோய்களை நீக்கும் இஞ்சி மருத்துவ பயன்கள்

Image
இஞ்சி: மணமுள்ள கிழங்குகளையுடைய சிறு செடி, எல்லாக் காய்கறிக் கடைகளிலும் கிடைக்கும். தமிழகமெங்கும் பரவலாகப் பயிரிப்படுகிறது. கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. உலர்த்திப் பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் சுக்கு எனப்படும். மருந்துக் கடைகளில் கிடைக்கும். வியர்வை உமிழ்நீர்ப் பெருக்கியாகவும், பசித் தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயற்படும். இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச் சாறு வகைக்கு 30 மி.லி யுடன் தேன் 15 மி.லி கலந்து 15 மி.லி அளவாக அடிக்கடி கொடுத்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் தீரும். வெங்காயச் சாறுக்குப் பதிலாக எலுமிச்சைக் சாற்றையும் பயன்படுத்தலாம். இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு வகைக்கு 15 மி.லி தேன் கலந்து 15 மி.லி அளவில் 3 வேலையாகச் சாப்பிட்டு வர இருமல், இரைப்புத் தீரும். 200 கிராம் இஞ்சி தோல் நீக்கிச் துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் ( 45 நாள்கள்) சாப்பிட உடல் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சுவலியும் மனத்திடமும் பெற்று ம...

ஆணைக் கற்றாழை மருத்துவப் பயன்கள்.

Image
ஆணைக் கற்றாழை: பெரிய மடல்களையுடைய கற்றாழை இனம். இராகாசிமடல், ரயில் கற்றாழை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் நாருக்காக வறட்சியான இடங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மடல், குருத்தின் கீழ் உள்ள கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சிறுநீர் பெருக்குதல் உடல் தேற்றுதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது. ஆணைக்கற்றாழை மடலை வாட்டிப்பிழிந்து சாற்றில் போதுமான அளவு கேழ்வரகு மாவையோ மூசாம்பரப் பொடியையோ கலந்து கொதிக்க வைத்து வீக்கமுள்ள இடங்களில் பற்றுப்போட வீக்கம் கரையும். 50 கிராம் மடலுடன் 25 கிராம் நன்னாரி வேரைப் பொடித்துப் சேர்த்து ஒரு லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை,மதியம் மாலை 30 மி.லி யாகக் குடித்து வரப் பாலியல் நோயான கொறுக்குப் புண், கிரந்தி ஆகியவை தீரும். குருத்தின் கீழ் உள்ள மென்மையான கிழங்குப் பகுதியை எடுத்து சர்க்கரை கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர வெள்ளை குணமாகும். ஆணைக்கற்றாழை வேரை 30 கிராம் நசுக்கி 1 லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டிப் பாதிப்பாதியாய் காலை மாலை குடித்து வர சிறுநீரைத் தாரளமாக வ...

ரோஜாவின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

Image
மலர்களில் ரோஜாவுக்கு தனி மகத்துவம் உண்டு. அழகு, மணம் என்று எவரையும் கவர்ந்துவிடக்கூடியது ரோஜா. அழகு, அன்பு, கனிவு, மென்மை போன்ற பண்புகளின் சின்னமாக விளங்கும் ரோஜா, வெளிநாட்டில் இருந்து தான் இந்தியாவுக்குள் புகுந்தது. ரோஜா, மலர்களில் மட்டும் ராணி அல்ல. மருத்துவப் பயன்பாட்டுக்கும் ராணியாகத் திகழ்கிறது. ரோஜா மலரானது இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. இதன் இதழ் புண்களை ஆற்றும். உடல் பலம் தந்து இதயம்,  நரம்புமண்டலத்திற்கு நன்மை தருகிறது. தொண்டைநோய், சளி, இருமல், சுவாசநோய், நாவறட்சியைக் குணமாக்கும். ரோஜா இதழ்களில் உள்ள துவர்ப்புச் சுவை, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். ரோஜாப் பூவினால் தயாரிக்கப்படும் ‘குல்கந்து’ மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்தது. உஷ்ணம் காரணமாக ஏற்படும் வயிற்றுவலி நீங்க இது உதவும். ரோஜா இதழில் தயாராகும் பன்னீர், மயக்கத்தையும், மனக் கவலையையும் போக்கும். ரோஜாப் பூவைக் கொண்டு தயார் செய்யப்படும் இனிய சுவையுள்ள சர்பத், ரத்த விருத்திக்கு பயனுள்ள ஒரு டானிக் ஆகும். இந்த ரோஜாப் பூ சர்பத் உடல் உஷ்ணத்தை எப்போதும் நீக்கி புதிய உற்சாகத்தை அளிக்கும். ...

நெஞ்செரிச்சலை குணமாக்க சில வழிகள்!

Image
நெஞ்செரிச்சல் என்பது தற்போது சாதாரண விஷயமாகி விட்டது. நேராநேரத்துக்கு சாப்பிடாததும் முறையற்ற உணவும் தான் நெஞ்செரிச்சல் ஏற்பட காரணம். சாப்பிடும் உணவை செரிக்க வைப்பதற்காக வயிற்றில் அமிலம் சுரக்கிறது. அப்படி சரியான உணவை எடுத்துக் கொள்ளாத போது இரைப்பையில் சுரக்கும் அமிலம் அதிகமாக சுரக்கத் தொடங்கும். அப்போது தேங்கி இருக்கும் அமிலமானது வயிற்றெரிச்சலை தோற்றுவிக்கும். இந்தநிலையில் இறுக்கமான உடை அணிந்து இருந்தாலோ அல்லது அதிக காரம் மிகுந்த உணவை சாப்பிடும் போதோ அந்த அமிலமானது உணவுக்குழாய் வழியாக மேலே சென்று, நெஞ்சில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதை ஒருசில உணவுகள் மூலம் சரிசெய்ய முடியும். இது தவிர சரியான நேரத்தில் சாப்பிடுவது, குறைந்தது 8 மணி நேரம் தூங்குவது, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதால் சரி செய்யலாம். நெஞ்செரிச்சலை சில பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளும் நெஞ்செரிச்சலை சரிசெய்யும். ஆப்பிளில் கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் பொது, அப்பிளை சாப்பிட்டால்...

குழந்தைகளின் வயிற்றுப்போக்கை தடுக்கும் வழிகள்!

Image
குழந்தைகளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதை பல பெற்றோர்கள் உணர்வதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை பருகுவதால் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. நீரால் ஏற்பட்ட இந்த நோயை குணப்படுத்த, தண்ணீரே மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை கொடுப்பது அவசியம் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி குழந்தைகளின் உயிர்க்கொல்லி நோய்களில் பாக்டீரியா,வைரஸ் கிருமிகள்,பூஞ்சைக் காளான் எனும் கிருமிகளால் ஏற்படும். இதைத் தவிர்த்து உணவு நச்சுத் தன்மையால் அலர்ஜி ஏற்பட்டு அதன் மூலம் வயிற்றுப்போக்கு உண்டாகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படும் போது குழந்தைகளின் உடலில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறுகிறது. இதனால் குழந்தைகள் நீரிழந்த நிலையை அடைகின்றனர்.ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு நா வறட்சி ஏற்படும். நாடித்துடிப்பு அதிகரித்தும், சிறுநீர் போவது குறைந்தும் காணப்படும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்குடன்  தொடர் வாந்தி,வாயிற்று உப்பசம்,சிறுநீர் அற்றுப் போதல்,குழிவிழுந்த கண்கள்,வேகமான சுவாசம் போன்றவை ஆப...

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பலாக்காய்

Image
பலா: பலா, மர வகையை சார்ந்தது. இது வெப்பநாடுகளில் நன்கு வளரும். கேரளா, தமிழகம், கர்நாடகம், கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பலா அதிகமாக விளைகிறது. கிழக்காசிய நாடுகளான இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் பலா மரங்கள் அதிகம் உள்ளன. பலாப்பழத்தை பற்றியே நாம் அதிகம் அறிந்திருக்கின்றோம். பலா பிஞ்சு மற்றும் இளம் காய் சிறந்த காய்கறி உணவாக பயன்படக்கூடியது. சுவையானது, அதில் பல அரிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இலங்கையில் பலாக்காய் உணவுகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அரிசி உணவுக்கு இணையான அளவு மாவு சத்து இதில் உள்ளதால் பலா மரத்தை ‘அரிசி மரம்’ என்றும் அழைக்கின்றனர். வங்காளதேசத்தில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் பலாக்காய் உணவுகளை உண்டு ஊட்டச்சத்து குறைபாட்டை மக்கள் ஈடு செய்தார்கள். ‘ஏழைகளின் காய்’ என அந்நாட்டில் பலாக்காய் கொண்டாடப்படுகிறது. நம் அண்டை மாநிலமான கேரளாவில் 3 ஆயிரம் வருடங்களாக பலாக்காயை உணவில் பயன்படுத்தி வருகிறார்கள். போர்ச்சுகீசியர்கள் ஆதிக்கத்திற்கு முன்பு வரை அரிசி உணவுகளுக்கு இணையான பலாக்காய் உணவுகள் பயன்படுத்தப்பட்ட...

முதுமையை விரட்டி எராளமான நன்மைகள் தரும் நெல்லிக்கனி

Image
நெல்லிக்கனி: மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் நெல்லிக்கனியை வலிமை நெல்லி,உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையானது. நெல்லியின் மருத்துவ குணங்கள் வேறு பழங்களில் இல்லையென்று சொல்லலாம். அந்த அளவிற்கு அதில் மருத்துவ குணங்கள் அதிகம். மனிதனை இளமையாக வைத்துகொள்ள முக்கியமானதாக சொல்லப்படும் காயகல்பத்தில் நெல்லி தான் பிரதான பொருள். மேலும் இது தாது விருத்திக்கும், தலை முடி டானிக்காகவும் பயன்படுகிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. அதனால் கண்களின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு மேன்மையான ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்தால் அந்த நீர் தூய்மையான குடிநீராக மாறிவிடும். 100 கிராம் நெல்லிச்சாற்றில் 82 சதவீதம் நீரும், 0.5 சதவீதம் புரதமும், 0.1 சதவீதம் கொழுப்பும், 14 சதவீதம் மாவுப்பொருளும், 3.5 சதவீதம் நார்ச்சத்தும், 50 யூனிட் அளவு கால்சியமும், 20 யூனிட் பாஸ்பரசும், 1.2 யூனிட் இரும்பும், 600 யூனிட் வைட்டமின்...

கொழுப்பை குறைக்கும் சுரைக்காயின் மருத்துவ பயன்கள்.

Image
சுரைக்காய்: உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களில் சுரைக்காயும் ஓன்று. சுரைக்காய் உணவகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்கலன்களாகப் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. சுரைக்காய் 2 அடி நீளம் 3 அங்குலம் விட்ட அளவில் வளரக்கூடிய நீர்சத்து மிகுந்த காய்கறி ஆகும். இது மலிவு விலையில் கிடைக்கும் காய்கறிகளில் ஓன்று. இதில் அதிக சத்து நிறைந்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகெங்கும் சாகுபடி செய்யப்பட்டாலும், இதன் பூர்வீகம் தென்னாப்பிரிக்கா ஆகும். உடம்பில் கொழுப்பை கரைப்பதிலும் சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே. உடலில் கொழுப்புச் சத்து சேர்ந்து அவதிப்படுபவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சுரைக்காயை சூப் செய்து குடிக்கலாம். சுரைக்காய் சூப் தலைமுடி வளர்வதையும் ஊக்கப்படுத்துகிறது. சுரைக்காயில் பாஸ்பரஸ் சத்து அதிகம் உள்ளது. இது எலும்புக்கும், பற்களுக்கும் வலு கொடுக்கிறது. ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சுரைக்காய் நல்ல...

இளமையை பாதுகாக்கும் துளசி உணவுகள்

Image
துளசி, தெய்வீக மூலிகை. இதில் ராமதுளசி, கிருஷ்ண துளசி, வனதுளசி போன்ற வகைகள் உண்டு. கரும்பச்சை நிறத்தில் இருக்கும் கிருஷ்ண துளசி அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. வணதுளசியில் நறுமண எண்ணெய் அதிகம் உள்ளது. துளசியில் இருக்கும் நறுமண எண்ணெய் வகைகள்தான் அதன் மனத்திற்கும் மருத்துவ குணங்களுக்கும் காரணம். துளசியில் இருக்கும் யூஜினால் என்ற வேதிப் பொருள் சளியை அகற்றும் சக்தி கொண்டது. யூஜினால் நீராவி மூலம் துளசியில் இருந்து பிரித்தெடுப்பார்கள். துளசியின் இலை, தண்டு, பூ, வேர் அனைத்திலுமே மருத்துவ குணம் இருக்கிறது. துளசி உஷ்ண வீரிய தாவரம். இது திசுக்களை உலர செய்யும் இயல்புடையது. திசுக்களில் ஆழமாக சென்று நீர் தன்மையை குறைக்கும். அதனால் உடலில் கபமும், வாதமும் சீராகும். வாதம் காரணமாக உடலில் ரத்த ஓட்ட தடை, வலி, வீக்கம் தோன்றும். இவைகளை துளசி சாறு கஷாயம் சீர் செய்யும். வீக்கத்திற்கு துளசி இலையை அரைத்து பற்று போடவேண்டும். கபம் உடலில் அதிகரித்தால் உடல் மந்தம், சோர்வு, தொண்டை கட்டு, சளி, இருமல், மூச்சிரைப்பு போன்றவை உருவாகக்கூடும். அத்தகைய காலகட்டங்களில் துளசி சாறு 50 மி.லி, இஞ்சி சாறு 2 தேக்...

இளநீரின் எண்ணற்ற நன்மைகள்

Image
மனிதர்களுக்கு இயற்கை வழங்கியுள்ள கொடைகளில் ஒன்றான இளநீர், எண்ணற்ற நன்மைகளை அள்ளித் தருகிறது. இது வெப்பத்தைத் தனித்து, செரிமான சக்தியை அளிக்கும். இளநீர் குடித்தால் ரத்தம் சுத்தமடைவதொடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. பெண்களின் மாதவிலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி, சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர்தான். டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கபடும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகிப்பதால் அறுவைச் சிகிச்சைப்புன் விரைவில் குணமடையும். இவ்வளவு நன்மைகளை மனிதனுக்கு வழங்கும் இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதைத் தவிக்க வேண்டும். ஏனெனில், தூங்கி எழுந்தவுடன் வயிறு சற்று சூடாக இருப்பதால், இளநீ...

கொய்யாவில் குவிந்திருக்கும் சத்துக்கள்

Image
மலிவாகக் கிடைக்ககூடிய பழமான கொய்யாவில் பல்வேறு சத்துகள் குவிந்திருக்கின்றன. இதில் வைட்டமின்-பி, சி ஆகிய உயிர்ச்சத்துகள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. மற்ற பழங்களை ஒப்பிடும்போது கொய்யாவில் வைட்டமின்-சி அதிகம் உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு இப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், அப்பிரச்சனையில் இருந்து மீளலாம். கொய்யாப் பழத்தை நறுக்கிச் சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள, ஈறுகள் வலுவடையும். இந்தப் பழம் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கொய்யாவை உட்கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொய்யாப் பழத்தில் உள்ள லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள், புற்றுநோய்க் கட்டிகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டவை. கொய்யாப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக் கொள்ளலாம். கொய்யாப் பழத்தை தோல் நீக்...

நோய் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிவிக்கும் நமது உடல் உறுப்புகள்.

Image
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். கண் இமைகளில் வலி.. என்ன வியாதி? அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி? அதிகம...

அவரையின் முக்கிய மருத்துவ குணங்கள்

Image
அவரைக்காய், பல அறிய மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் விரும்பி உண்ணப்படுகிறது. அவரைக்காய் நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை உடையதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புசத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும். அவரைப் பிஞ்சுகளை நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்து சாப்பிடும் காலத்திலும், விரதம் இருக்கும் காலத்திலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்குப் பலத்தைக் கொடுப்பதுடன், விரத காலத்தில் மன அமைதியை அதிகரிக்க உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும். பித்தத்தினால் உண்டாகும் கண் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும். அவர...