தொலைவில் இருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம் கொண்ட நாகலிங்க மலர்கள்.
நாகலிங்க மலர் இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு வண்ணம் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்டது நாகலிங்க மலர்கள். தொலைவில் இருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம் கொண்டது இந்த மலர்கள். மகரந்த தூவிகள் படமெடுத்து ஆடும் பாம்பு போல் வித்தியாசமாக இருப்பதால், இதன் பெயரும் வித்தியாசம்தான். நாகலிங்க மரங்கள் நீலகிரி மழைப் பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. மிதமான தட்பவெப்ப நிலையில் வளரும் தன்மை கொண்டது இந்த மரங்கள், நீலகிரி மாவட்டம் பர்லியாறு பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. கடல் கடந்து வந்த மரம் பல தாவரங்கள் கடல் கடந்து நம் மண்ணை வந்தடைந்துள்ளன. அவை நம்மிடையே பரவலானது மட்டுமில்லாமல், உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்று நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகவும் மாறி விடுவது உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த நாகலிங்க மரமும். இதன் தாவரவியல் பெயர் கொரூபியா கினென்சிஸ். தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல பகுதிகள் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளை தாயகமாகக் கொண்ட இந்த மரம் லேசிதிடசாய் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது. இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது. இலங்கையின் சில பகுதிகளிலும் நாகலிங்க ம...