Posts

Showing posts from November, 2018

கேரட்,வெள்ளரி மருத்துவ பயன்கள்

Image
கேரட் : கேரட்டை தோல் சீவக்கூடாது. தோலுக்கு நெருக்கமாகத் தான் தாதுக்கள் உள்ளன. பச்சையாகவோ, சமைத்தோ உண்ணக் கூடிய கிழங்கு இது. அல்வா போன்ற இனிப்பு செய்யவும், குழம்பு, பொரியலை செய்யவும் கேரட் பயன்படும். கேரட் சாறு குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஆரோக்கியம் அளிக்கிற பானம். கண்களுக்கு வலிமையைத் தரும். பெண்களுக்கு கேரட் விதைகளை தங்களுடைய கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பப்பையின் சுவர்களில் அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி கருச்சிதைவுக்கு காரணமாகும். சாப்பாட்டிற்கு பிறகு ஒரு கேரட்டை மென்று தின்றால் கெடுதல் விளைவிக்கக்கூடிய கிருமிகள் அழிந்துவிடும். பற்களைச் சுத்தமாக்கும். ஈறுகளில் இரத்தம் கசிவதைத் தடுக்கும். பற்சிதைவையும் தடுக்கும்.  கேரட் சூப் வயிற்ருப்போக்கை குணப்படுத்தும் ஒரு இயற்கை நிவாரணி, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை தாராளமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும். கேரட்டை அரைத்து அரைவேக்காடு முட்டையும், தேனும் கலந்து உண்டால் ஆண்மை சக்தி பெருகும். கேரட் விதை ஒரு தேக்கரண்டி அ...

அரைக்கீரை மற்றும் பொன்னாங்கண்ணி கீரைகளில் உள்ள சத்துக்கள்!

Image
அரைக்கீரை: அரைக்கீரை (ஒலிப்பு) அல்லது குப்பை கீரை என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் கீரைகளில் ஒன்றாகும். சித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர் சன்னி, கப நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக இக்கீரை கூறப்பட்டுள்ளது. தோசை, கூட்டு, சூப், கூட்டல், வடை, மசியல் என பல வகைகளில் அரைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது கீரையாகத் தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும். ஆப்பிரிக்காவிலும் போற்றி உண்ணப்படுகிறது. அரைக்கீரை உடலுக்கு வெப்பத்தை கொடுப்பதினால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஒரு முக்கிய உணவாக அளிக்கபடுகிறது. அதோடு பிரசவத்தால் எற்படும் உடல் மெலிவை போக்கி, உடலுக்குச் சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றது. · வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் நிறைவாக உள்ளன. · நுரையீரல் சார்ந்த நோய்கள் மற்றும் கபத்துக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. · ரத்தத்தைச் சுத்திகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். · உடலுக்கு வெப்பத்தை அளிக்கக் கூடியது. அரைக்கீரைச் சாறுடன் மிளகு, சீரகம் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்துவந்தால், சளி, இருமல் நீங்கும். ...

முருங்கைக் கீரையில் என்னென்ன சத்துக்கள் உள்ளன.

Image
‘கீரை உடலுக்கு மிகவும் நல்லத’ என்று யாரைக் கேட்ட்டலும் சொல்வார்கள். ஆனால், வாரத்துக்கு ஒருநாள் கூட கீரை சேர்த்துக்கொள்ளாத குடும்பங்கள்தான் நம் ஊரில் அதிகம். கீரைகள் ஊட்டச்சத்துக்கள், தாதஊப்புக்களின் சுரங்கம், வைட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம், மக்னிசியம், பீட்டாகரோடின், நுண்ட்டச்சத்துக்கள் என அனைத்தும் கீரைகளில் நிறைந்துள்ளன. கலோரி மிகக் குறைவு என்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க இது சிறந்த உணவு. நார்ச்சத்து நிறைந்தது என்பதால், செரிமானப் பிரச்னையைத் தவிர்க்கிறது. புற்றுநோய், இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. அதிக மக்னீசியம், குறைவான கிளைசமிக் இன்டெக்ஸ் கொண்டதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. தினம் ஒரு கீரையை சேர்த்துக்கொள்வதன் மூலம் தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் தவிர்க்க முடியும். கீரைகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன. அவற்றின் பலன் என்ன என்பதை பாப்போம். முருங்கைக் கீரை முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ உண்ணப்படும் ஒரு உணவு ஆகும். இதில் "muringa" என்ற பெயர், "முரு...