கேரட்,வெள்ளரி மருத்துவ பயன்கள்
கேரட் : கேரட்டை தோல் சீவக்கூடாது. தோலுக்கு நெருக்கமாகத் தான் தாதுக்கள் உள்ளன. பச்சையாகவோ, சமைத்தோ உண்ணக் கூடிய கிழங்கு இது. அல்வா போன்ற இனிப்பு செய்யவும், குழம்பு, பொரியலை செய்யவும் கேரட் பயன்படும். கேரட் சாறு குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஆரோக்கியம் அளிக்கிற பானம். கண்களுக்கு வலிமையைத் தரும். பெண்களுக்கு கேரட் விதைகளை தங்களுடைய கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பப்பையின் சுவர்களில் அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி கருச்சிதைவுக்கு காரணமாகும். சாப்பாட்டிற்கு பிறகு ஒரு கேரட்டை மென்று தின்றால் கெடுதல் விளைவிக்கக்கூடிய கிருமிகள் அழிந்துவிடும். பற்களைச் சுத்தமாக்கும். ஈறுகளில் இரத்தம் கசிவதைத் தடுக்கும். பற்சிதைவையும் தடுக்கும். கேரட் சூப் வயிற்ருப்போக்கை குணப்படுத்தும் ஒரு இயற்கை நிவாரணி, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை தாராளமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும். கேரட்டை அரைத்து அரைவேக்காடு முட்டையும், தேனும் கலந்து உண்டால் ஆண்மை சக்தி பெருகும். கேரட் விதை ஒரு தேக்கரண்டி அ...